நாம வெச்சதுதான் சட்டம்! அதிரடி சரவெடியாய் மகான் படத்தின் டீஸர்!

ப்ரைம் வீடியோ சமீபத்தில் வெளிவரவிருக்கிற புதிய அதிரடிச் சண்டைக் காட்சிகள் நிறைந்த  ‘மகான்’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்டது.

பிப்ரவரி 10 ஆம் தேதி வெளிவரவிருக்கும் ‘சீயான்’ விக்ரமின் 60-வது திரைப்படமான ‘மகான்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு, முன்னரே, அதிகம் எதிர்பார்க்கபட்ட சண்டைக்காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படத்தின் டீசரை ப்ரைம் வீடியோ சற்று முன்பு வெளியிட்டது.

பரபரப்பான இந்த டீசர் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தும். மனதைக் கவரும் கதைக்களத்தோடு  அதிரடிச் சம்பவங்கள் நிறைந்த “மகான்’ உலகத்தின் ஒரு பார்வையை அறிமுகப்படுத்துகிறது. நட்பு, போட்டி ,மற்றும் விதியின் விளையாட்டின் சம்பவங்கள் பின்னிப்பிணைந்த ஒரு விறுவிறுப்பான கதை விவரிப்பை  இந்த டீசர் மூலம் எதிர்பார்க்கலாம்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க, தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படம் ஒரு சாதாரண மனிதனையும், அவனைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகள்… அவனை மட்டுமல்லாமல் அவனைச் சுற்றியுள்ள மக்களையும் மாற்றுவதை விறுவிறுப்பாகக் காட்சிப்படுத்துகிறது. வாழ்வில் உண்மையான தந்தை = மகன் உறவை கொண்ட ஜோடியான விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் முதல் முறையாக  ‘மகான்’ .படத்தில் இணைந்து தோன்றுகிறார்கள்.

அவர்களுடன் முக்கியமான பாத்திரத்தில் பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பிப்ரவரி 10 ஆம் தேதியன்று ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியிடப்படும். தமிழில் மட்டுமல்லாமல்  மற்றும் இது மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் வெளியாகிறது. கன்னட மொழியில் இந்தத் திரைப்படம் “மகா புருஷா” என்று பெயரிடப்பட்டிருக்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here