நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட, ‘மெட்ரோ‘ சத்யா நடிக்கும் ராபர் படத்தின் டிரெய்லர்!

‘மெட்ரோ‘ சத்யா நடிப்பில், சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகியுள்ள ‘ராபர்’ படத்திற்கு ‘மெட்ரோ‘ திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார்.

சத்யா ஏற்கெனவே ‘மெட்ரோ’ படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்க பட்டவர்.
அவருடன் தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பத்திரிகையாளர் கவிதா தயாரித்துள்ள இந்த படம் வரும் மார்ச் 14-ம் தேதி வெளியாகிறது. படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். அதையடுத்து படத்தின் டிரெய்லரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here