புதுமுகங்களான ஷான் நாயகனாகவும், ஷெர்லி பபித்ரா நாயகியாகவும் நடித்துள்ள படம் ‘ரேஜ்.’
சென்னையில் வாடகைக் கார் ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு இளைஞன் வாழ்வில் நடக்கும் ஒரு எதிர்பாராத சம்பவம், அவன் வாழ்க்கையையே மாற்றுவதுதான் படத்தின் மையம். மாறுபட்ட களத்தில், காதல் கதையுடன், பழிவாங்கும் பின்னணியில் அசத்தலான ரிவெஞ்ச் திரில்லராக இந்த படத்தை இயக்கியுள்ளார் சிவனேசன்.
நாயகன் ஷான் அடிப்பட்டு இரத்தம் வழியும் முகத்துடன், ஆக்ரோசம் பொங்க பார்ப்பதாக வெளியாகியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
படத்தில் பவன் ஜினோ தாமஸ், ஆர்யன், பிரதோஷ், விக்ரம் ஆனந்த் ஆகியோர் வில்லன் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் முன்னணி நடிகர்களான சரவணன், முனிஷ்காந்த், ராமசந்திரன், மணிகண்டன், அஜித் கோஷி, காயத்ரி ரெமா, கிச்சா ரவி, காலா பீம்ஜி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
அனைத்து ரசிகர்களும் கொண்டாடும் வகையில் கமர்ஷியல் திரில்லராக உருவாகியுள்ள இப்படம், சென்னை, கேரளா, பொள்ளாச்சி ஆகிய ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
பட வெளியீட்டுக்கான இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. டிரெய்லர் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

