Home Uncategorized பராசக்தி, ஜனநாயகன் படங்களோடு மோதுகிறது, விசைத்தறி தொழிலை மையமாக வைத்து வாழ்வியல் படைப்பாக உருவாகியுள்ள ‘ராட்ட.’

பராசக்தி, ஜனநாயகன் படங்களோடு மோதுகிறது, விசைத்தறி தொழிலை மையமாக வைத்து வாழ்வியல் படைப்பாக உருவாகியுள்ள ‘ராட்ட.’

பொங்கல் வெளியீடான ஜனநாயகன், பராசக்தி படங்களோடு ‘ராட்ட’ திரைப்படமும் ரிலீஸாகவுள்ளது.

இந்த படம் விசைத்தறி தொழிலை மையமாக வைத்து வாழ்வியல் திரைப்படமாக காதலோடு கண்ணியம் கலந்து உருவாகியுள்ளது. படத்தை இயக்கி கதையின் நாயகனாக நடித்துள்ளார் சக்திவேல் நாகப்பன்.

படத்தில் ஹெலன் சித்தா தர்ஷன் சாப்ளின் பாலு, சந்திரன், கிருஷ்ணன், முத்துராஜா, பம்பாய் சுப்ரமணி, கல்பனா, வசந்தி, ஜெயஸ்ரீ, ரத்னா, செல்லம்மா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

திருமணத்திற்கு முன் சேமிப்பு என்ற பழக்கம் இல்லாத இளைஞன் திருமணத்திற்கு பின் அத்தியாவசிய தேவைக்கு கடன் வாங்க அதன் மூலம் அவன் வாழ்வில் வரக்கூடிய மாற்றம், தன் கணவனின் சிரமத்தை புரிந்த மனைவி கணவனை எவ்வாறு தேற்றி வாழ்க்கையில் வெற்றி பெற இணைந்து பயணிக்கிறார்கள் இறுதியில் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பது படத்தின் மையக்கரு.

படம் பற்றி பேசிய இயக்குநர் இந்த படம் அனைத்து விசைத்தறி தொழிலாளர்களுக்கும் மாபெரும் புத்தாண்டு பரிசாகவும் பொங்கல் கொண்டாட்டமாகவும் அமையும்” என்றார்.

வருமானத்திற்காக மட்டுமில்லாமல் சமுதாயத்திற்காகவும் இந்த படத்தை தயாரித்துள்ளது எஃப் எம் எஸ் மீடியாஸ் நிறுவனம். யூ சான்றிதழ் பெற்றுள்ள இந்த படத்தை சி எஸ் எம் கிரியேஷன் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியீடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்