‘ஜெயிலர்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் சூப்பர் ஸ்டார் தந்த இன்ப அதிர்ச்சி! உற்சாகத்தில் ‘ரோபோ’ சங்கரின் குடும்பம்!

‘ரோபோ’ சங்கர் விஜய் தொலைக்காட்சியின் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர். கடந்த சில் வருடங்களாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிசியாக இருக்கிறார்.

இவருடைய மனைவி பிரியங்காவும் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர்களின் மகள் இந்திரஜா, விஜயின் ‘பிகில்’ படத்தில் பாண்டியம்மாவாக நடித்து கவனம் ஈர்த்தார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கலைக்குடும்பமாக வலம் வரும் ரோபோ சங்கருக்கு இன்று 22-வது திருமண நாள். அதை முன்னிட்டு சூப்பர் ஸ்டாரை சந்தித்து வாழ்த்து பெற அனுமதி கேட்டிருந்த நிலையில் சூப்பர் ஸ்டாரிடம் இருந்து அழைப்பு வந்தது. கிழக்கு கடற்கரை சாலையில் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், ரோபோ சங்கரின் குடும்பத்தை அழைத்து வாழ்த்தினார்.

திருமண நாள் பரிசாக சூப்பர் ஸ்டார் தங்களை அழைத்து சந்திக்கிற வாய்ப்பளித்தில் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகி உற்சாகத்தில் இருக்கிறது ரோபோ சங்கரின் குடும்பம்!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here