எச்.ஐ.வி. பாதித்த குழந்தைகளுக்கு 8 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்… ‘ரவுண்ட் டேபிள் இந்தியா’ & ‘லேடீஸ் சர்க்கிள் இந்தியா’ இணைந்து வழங்கி ஊக்குவிப்பு!

ரவுண்ட் டேபிள் இந்தியா (ஆர்டிஐ) & லேடீஸ் சர்க்கிள் இந்தியா (எல்சி இந்தியா), ஆர்ஆர்டி நிறுவனத்துடன் இணைந்து ப்ராஜெக்ட் பவிஷ்யா – 8 லட்சம் மதிப்பிலான புத்தகப்பை, எழுது பொருட்கள், காலணி, உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி ஆகியவற்றை கோடம்பாக்கத்தில் உள்ள சக்தி இல்லத்தில் 50 எச்.ஐ.வி. பாதித்த குழந்தைகளுக்கு உதவிகளை வழங்கினர்.சமூக சுகாதாரக் கல்விச் சங்கம் (CHES) பவிஷ்யா என்ற திட்டத்தைச் செயல்படுத்தியது, அங்கு தகுதியுள்ள 50 எச்.ஐ.வி. பாசிட்டிவ் குழந்தைகள் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான, படித்த, அதிகாரம் பெற்ற தனிநபராக வளர்வதற்கான உரிமைகளை உறுதிசெய்கிறது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் திருமதி.கௌசல்யா, பாசிட்டிவ் வுமன் நெட்வொர்க்கின் இயக்குனர் பங்கேற்றார்.
கல்வி மற்றும் நல்வாழ்வுக்கான ஆதரவைப் பெறுவதில் குழந்தைகளும் பெற்றோரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
ஏரியா 2 தலைவர் விஜய் ராகவேந்திரா மற்றும் தலைவி திவ்யா சேத்தன் ஆகியோர் கல்விக்கான உரிமையை உறுதி செய்யும் திட்டமான பவிஷ்யாவைத் தொடங்கியதற்காக தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.  இந்த நிகழ்வை மாபெரும் வெற்றியடையச் செய்த CHES  நிறுவனர் Dr.மனோரமா, RRd, விழா விருந்தினர்கள், குழந்தையின் முகத்தில் புன்னகையை வரவழைப்பதற்கு முழு ஆதரவளித்த சக உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here