ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14-ம் தேதியிலிருந்து ஒருவார காலம் ரவுண்ட் டேபிள் இந்தியா வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அப்படியான கொண்டாட்டத்தில் இந்த ஆண்டும் சமத்துவத்தை ஊக்குவிக்கும் பொருட்டு திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன.
அதையடுத்து சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்த அமைப்பின் தலைவர் சந்தோஷ், ‘கல்வி மூலம் விடுதலை’ என்கிற திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் 7890 வகுப்பறைகள் கட்டமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மட்டுமல்லாது ”குழந்தைகளுக்கான இலவச இருதய அறுவை சிகிச்சை, ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட சேவைகளை வழங்கி வரும் இந்த அமைப்பு, ஐ.ஐ.டி யுடன் இணைந்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வீல் சேர்களை உருவாக்கி சுமார் 200 பேருக்கு வழங்கியுள்ளோம்.
தவிர, நிதி நிறுவனங்களுடன் இணைந்து 500 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு உதவி செய்து வருகிறோம்” என்றார்.
ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் ஏரியா 2 என்பது சென்னை, புதுச்சேரி மற்றும் நெல்லூர் ஆகிய இடங்களை உள்ளடக்கிய பகுதி என்றும், அந்த பகுதிகளில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் ஏரியா 2-ன் தலைவர் விஜய் ராகவேந்திரா தெரிவித்தார்.