அப்புக்குட்டி நடிப்பில், சாதிக்கத் துடிப்பவனை தடுக்கும் சாதியை மையப்படுத்தி ‘சூரியனும் சூரியகாந்தியும்.’ விரைவில் ரிலீஸ்!

சாதிக்கத் துடிப்பவனை, சாதி எப்படியெல்லாம் தடுக்கிறது என்பதை மையமாக வைத்து ‘சூரியனும் சூரியகாந்தியும்‘ என்ற படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி உயிரோட்டத்தோடு இயக்கியுள்ளார் ஏ.எல்.ராஜா.

‘டி.டி.சினிமா ஸ்டுடியோ’ சார்பில் உருவாகும் இந்த படத்தில் அப்புக்குட்டி, ஶ்ரீ ஹரி, விக்ரம் சுந்தர் மூவரும் கதையின் நாயகர்களாக நடிக்க ரிதி உமையாள் கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் சந்தான பாரதி, செந்தில் நாதன், ஏ.எல்.ராஜா, ‘குட்டிப்புலி’ வில்லன் ராஜசிம்மன், மங்களநாத குருக்கள், அழகு, செஞ்சி கே.அசோகன், சக்தி சொரூபன், ஏ.ஆர்.கே.ஆனந்த், சேஷு, மிப்புசாமி, உடுமலை ரவி, சச்சின், ரிந்து ரவி ஆகியோரும் நடிக்கிறார்கள்.ஏ.எல்.ராஜா, பார்த்திபன் – தேவயானி நடிப்பில், ‘நினைக்காத நாளில்லை’, ‘தீக்குச்சி’ மற்றும் தெலுங்கில் ‘அக்கிரவ்வா’ ஆகிய படங்களை இயக்கியவர்.

இப்போது ‘அப்புக்குட்டிக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும்’ என்ற நம்பிக்கை தருகிற அளவுக்கான கதைக்களத்தோடு ‘சூரியனும் சூரியகாந்தியும்’ படத்தை இயக்கியிருக்கிறார்.‘நினைக்காத நாளில்லை’ படத்தில் வடிவேலு – பார்த்திபன் கூட்டணியில் ‘ஹலோ யார் பேசறது… நீ தான்டா பேசுற…’ என்ற காமெடி, ‘தீக்குச்சி’ படத்தில் நரிக்குறவனாக படம் முழுவதும் வடிவேலு செய்த காமெடி போல், இந்த படத்திலும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காமெடி மற்றும் விறுவிறுப்பான காட்சிகள் இருக்கிறதாம். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.படக்குழு:-
தயாரிப்பு – ஏ.எல்.ராஜா
இணைத் தயாரிப்பு – டெய்லி குருஜி, ஒளிப்பதிவு திருவாரூர் ராஜா
இசை – ஆர்.எஸ்.ரவி பிரியன்
பாடல்கள் – ஏ.எல்.ராஜா, கவிஞர் செங்கதிர் வாணன்
எடிட்டிங் – வீரசெந்தில்ராஜ்
நடனம் – மாஸ்டர் மஸ்தான்
சண்டைப் பயிற்சி – ஸ்பீடு மோகன்
கலை – ஜெயசீலன்
மக்கள் தொடர்பு – கோவிந்தராஜ்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here