நோயாளிகள் உடல்நலம் குறித்த முழு தகவல்களை அறிந்துகொள்ள சிம்ஸ் மருத்துவமனையில் சிம்ஸ் ஜெனெடிக் க்ளினிக் தொடக்கம்!

சிம்ஸ் மருத்துவமனை, லைஃப்செல் டயாக்னாஸ்டிக்ஸ் (விரைவில் எம்ஃபைன் டயாக்னாஸ்டிக்ஸ்) ஆய்வகத்துடன் இணைந்து, ஜெனெடிக் க்ளினிக் என்ற புதிய பரிசோதனை செயல்திட்டத்தை தொடங்கியுள்ளது.இது குறித்து எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து பேசும்போது, ‘‘அதி நவீன உயர்தர மருத்துவ சிகிச்சை அளிப்பதில் சிம்ஸ் மருத்துவமனை எப்போதுமே முன்னணியில் உள்ளது. லைஃப் செல் ஆய்வகத்துடன் இணைந்து எங்களது புதிய சிம்ஸ் ஜெனெடிக் க்ளினிக் தொடங்குவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். நோயாளிகளுக்குத் தங்களது ஆரோக்கியம் குறித்த ஆழமான புரிதலை வழங்குவதுடன், தங்கள் உடல்நலம் குறித்த முழு தகவல்களையும் அறிந்து கொண்டு முடிவு எடுக்க, மேம்பட்ட மரபணு பரிசோதனை மற்றும் கலந்தாய்வுச் சேவைகள் உதவும். எங்களது நோயாளிகளுக்கு மிக உயர்தர சிகிச்சை வழங்க உறுதியளிப்பதுடன், சுகாதாரம் மற்றும் நலத்தை மேலாண்மை செய்ய விரும்பும் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு, எங்கள் புதிய க்ளினிக் மதிப்புமிக்க ஆதாரமாக விளங்கும் என்றும் நம்புகிறோம்’’ என்றார்.சிம்ஸ் மருத்துவமனை மகப்பேறியல், மகளிர் மருத்துவம் மற்றும் ஐவிஎஃப் ஆய்வக இயக்குநரும், மூத்த மருத்துவ ஆலோசருமான டாக்டர் கோபிநாத் பேசும்போது, ‘‘எங்கள் நோயளிகளின் தேவைகளுக்கு ஏற்ப, உலகத் தரமான தீர்வுகள் மற்றும் நீண்ட காலப் பாதுகாப்பை வழங்குவதில் சிம்ஸ் மருத்துவமனை எப்போதும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. எங்கள் மருத்துவமனை அனைத்துச் சிறப்புத் துறைகளிலும் மிகப் பெரிய சாதனைகளைப் படைத்துள்ளது. லைஃப் செல் ஆய்வகத்துடன் இணைந்து எங்கள் நோயாளிகளுக்கு மேம்பட்ட சுகாதாரப் பாதுகாப்புச் சேவைகளை வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

பச்சிளம் குழந்தைகள், மகப்பேறுக்கு முந்தைய மற்றும் பிரசவத்துக்குப் பிந்திய பரிசோதனைகள், நோயறிதல் சேவைகள் ஆகியவற்றை வழங்குவதில் லைஃப்செல் டயாக்னாஸ்டிக்ஸ் முன்னணி வகிக்கிறது. கூடுதலாக, ‘லைவ் ஜெனெடிக் க்ளினிக்’ என்னும் கருதுகோள் வழியே, தகுதி மற்றும் அனுபவமிக்க கிளினிக்கல் மரபணு நிபுணர்கள், மரபணு ஆலோசகர்கள் மூலம், லைஃப்செல் மரபணு பிரிவில் நாட்டின் பல மருத்துவமனைகளுக்கு ஆதரவளித்து வருகிறது. மரபணு பிரிவில் ஏற்பட்டுள்ள மகத்தான வளர்ச்சி காரணமாக லைஃப்செல் ஆய்வகத்துடன் இணைத்து சிம்ஸ் மருத்துவமனையில் ஜெனெடிக் க்ளினிக் தொடங்கி உள்ளோம். இதன் மூலம் நோயாளிகளுக்கு நேரலை கலந்தாய்வு மூலம் சிறந்த ஆதரவையும், தீர்வையும் அளிக்கிறோம். நோயாளிக்குத் தேவையான பரிசோதனைகள், எதிர்கால அம்சங்கள் ஆகியவை தொடர்பான முழுமையான வழிகாட்டுதலை ஆலோசகர் வழங்குவார்’’ என்றார்.லைஃப்செல் டயாக்னாஸ்டிக்ஸ் (எம்ஃபைன் டயாக்னாஸ்டிக்ஸ்) மேலாண்மை இயக்குநர் மயூர் அபயா பேசும்போது, ‘‘ஆரோக்கிய நோயறிதல் தீர்வுகள் வழங்கும் எங்கள் பயணத்தில் சிம்ஸ் மருத்துவமனையிலுள்ள ஜெனெடிக் க்ளினிக் முக்கிய மைல்கல் ஆகும். ஜெனெடிக் க்ளினிக் மூலம் மரபணு தொடர்பான பிரச்சினைகளை உரிய காலத்தில் கண்டறிந்து நோயாளிக்கு உதவ உறுதி அளிக்கிறோம்” என்றார்.

ஜெனெடிக் க்ளினிக் பற்றி…
மரபணு பரிசோதனை தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய வளர்ச்சி காரணமாக, இம்மருத்துவமனை அனைத்துச் சிறப்புத் துறைகளிலும் விரிவான பரிசோதனைச் சேவைகளை வழங்கும். இதன் மூலம் மரபணு மாற்றங்கள், பரம்பரைச் சூழல்கள், குறிப்பிட்ட சுகாதார நிலைகள் தொடர்பான முன்கணிப்புகள் பற்றி அடையாளம் காணவும் உதவும். இந்த தகவலைப் பயன்படுத்தித் தனிப்பட்ட சிகிச்சைத் திட்டங்களை உருவாக்குவதன் மூலம், நோயாளிகள் தங்கள் சுகாதாரத்தை மேலாண்மை செய்வதுடன், குறிப்பிட்ட நோய்கள் உருவாகும் அபாயங்களைக் குறைக்க உறுதுணையாக இருக்கும்.

அனுபவம் நிறைந்த மரபணு ஆலோசகர்கள், நோயாளிகளுடன் இணைந்து செயல்பட்டுப் பரிசோதனை முடிவுகளைப் புரிந்து கொள்ள உதவுவார்கள். மேலும் வாழ்வியல் மாற்றங்கள் அல்லது மருத்துவச் சிகிச்சைகள் தேவைப்பட்டால் சரியான வழிகாட்டுதல்களையும் வழங்குவர். மரபணு பரிசோதனை முடிவுகள் காரணமாக நோயாளிகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஏதேனும் உணர்வு அல்லது மனநல ரீதியான சவால்கள் ஏற்பட்டால், அதைச் சமாளிக்கத் தேவையான ஆதரவையும், கலந்தாய்வுச் சேவைகளையும், ஆலோசகர்கள் வழங்குவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here