பல்வேறு துறைகளின் 30 ஆளுமைகள் வெளியிட்ட ‘சமூக விரோதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! ‘புனிதர்களின் கரங்களில் புறாக்களின் ரத்தம்’ என்கிற முழக்கத்தோடு விரைவில் ரிலீஸ்.

கந்து வட்டி கலாசாரத்திற்கு எதிராக ‘பொது நலன் கருதி’ படத்தினை இயக்கி பாராட்டுக்களைப் பெற்ற சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சமூக விரோதி.’
இந்த படத்தில் பிரஜின், நாஞ்சில் சம்பத், கஞ்சா கருப்பு, வனிதா விஜயகுமார், தயாரிப்பாளர் கே.ராஜன், வழக்கு எண் முத்துராமன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை விசிக தலைவர் தொல். திருமாவளவன், தோழர் க. பாலகிருஷ்ணன், வன்னி அரசு, விஜய் சேதுபதி, சசிகுமார், சமுத்திரகனி, நாஞ்சில் சம்பத், திண்டுக்கல் லியோனி, இயக்குநர் ராஜு முருகன், வாணி போஜன், சினேகன், கலையரசன், போஸ் வெங்கட் என 30 பேர் வெளியிட்டுள்ளனர்.

தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக ஒரு திரைப்படத்தின் முதல் பார்வையை பல்வேறு துறைகளைச் சார்ந்த 30 பேர் தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது இது முதல் முறை!

டைட்டில் லுக், வெளியான நிமிடத்திலிருந்தே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

படம் பற்றி இயக்குநர் சீயோன் ராஜா பேசுகையில், ”ஒரே அலைவரிசை எண்ணம் கொண்ட நண்பர்களின் கூட்டு முயற்சியால் சீயோனா ஃபிலிம் ஃபேக்டரி என்கிற நிறுவனம் உருவாகி உள்ளது. இந்நிறுவனத்தின் சார்பில், எனது இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது.சில சமூக விரோதிகள் அரசியல்வாதிகளையும் , அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தும் உயர் பொறுப்பில் இருப்பவர்களையும், தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு சமூகத்தில் பல நாசகரமான வேலைகளில் புத்திசாலிதனமாக ஈடுபட இந்த சமுதாயத்தில் பணத் தேவையுடன் வேலையின்றி ,பொருளாதார வறுமை கொண்ட இளைஞர்களைத் தேடிப் பிடித்து எப்படி அவர்களைத் தொழில்நுட்பத்திற்குப் பழக்கி சமூக விரோத செயல்களில் திட்டமிட்டு ஈடுபடுத்துகிறார்கள் என்பதை ‘சமூகவிரோதி’ திரைப்படத்தின் மூலமாக அம்பலப்படுத்தி உள்ளேன்.

புனிதர்களின் கரங்களில் புறாக்களின் ரத்தம்’ என்கிற சிந்தனை முழக்கத்தோடு படத்தின் தலைப்பை வைத்துள்ளோம்.

அறமே இல்லாத மனிதர்களிடம் இந்தச் சமூகம் கருணையை எதிர்பார்க்கிறது. மூளைச்சலவை செய்பவனிடம் முன்னேற வழி கேட்கிறது இதுதான் இந்த தலைமுறை முரண். கருத்தியல் ரீதியாக நான் வைத்திருக்கும் விவாதத்திற்கு சமூகம் செவி சாய்க்கும் என்றே நம்புகிறோம்.

இப்படத்தில் நல்லவன் ,கெட்டவன் என்ற எல்லையை வாழ்க்கை சம்பவங்களால் கடந்த ஒரு வைராக்கியம் மிகுந்த இளைஞனாக பிரஜின் நடித்துள்ளார். தனது தோற்றம், உடல் மொழி, பேச்சு என அனைத்தையும் மாற்றிக்கொண்டு ஒரு வீரியமுள்ள பாத்திரமாக வாழ்ந்துள்ளார். படத்தில் நடித்துள்ள அனைவருமே அந்தந்த பாத்திரத்திற்கு ஏற்ப தன்னை எப்படி தன் வயப்படுத்திக் கொண்டு உரிய முன் தயாரிப்புடன் நடிக்க வேண்டும் என்று விவாதித்து, கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து கொடுத்திறார்கள்.இந்த படைப்பை திரையுலக பிரமுகர்களும் , அரசியல் ஆளுமைகளும், ஊடக நண்பர்களும் வெளியிட்டு வாழ்த்தியிருப்பது எங்களை மேலும் ஊக்கப்படுத்துகிறது” என்றார்.

படக்குழுவினர்:-
ஒளிப்பதிவு – ஜிஜூ மோன் P.S.
இசை – மலாக்கி
கலை -முஜிபுர் ரஹ்மான்
எடிட்டிங் – மீனாட்சி சுந்தர்
ஸ்டண்ட் – பிரபு
நிர்வாகத் தயாரிப்பு – எஸ். வினு ஏற்றுள்ளார்.
தயாரிப்பு – டி. அருள்மணி சீயோன் ராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here