விசுவல் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் திரைப்படம் ‘சித்தரிக்கப்பட்டவை.‘ கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, கதாநாயகனாக நடிக்கிறார் ராம்குமார். பிரீத்தி கதாநாயகியாக நடிக்க, விமலா, கே.பி.கணேஷ்குமார், ரவி, மணி, குமரேஷ்பாபு ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குநரிடம் கேட்டோம்… ”அர்ஜூன் கிராமத்து இளைஞர். புத்திசாலி; தற்காப்புக் கலைகள் கற்றுத் தேர்ந்தவர். கலைத்துறையில் சிறப்பான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் நகருக்கு வருகிறார். தன் உறவுக்காரரும், இளம்பெண் தொழிலதிபருமான சித்ரா தயாரிக்கும் விளம்பரப் படங்களில் நடிக்கிறார். அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். சித்ராவையும் தீர்த்துக் கட்ட முடிவு செய்கிறார்கள். அனைத்தையும் அறிந்துகொள்கிற அர்ஜூன் முறைகேடுகளுக்கு எப்படி தீர்வு காண்கிறார், சித்ராவை காப்பாற்ற என்ன செய்கிறார் என்பதே கதை” என்றார்.
படத்தில் 5 பாடல்களும் 4 சண்டைக்காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. மதுரை, கொடைக்கானல், தேனி, திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.
படத்தின் தொழில்நுட்பக் குழு:-
ஒளிப்பதிவு – சுதன்
இசை – எம்.எஸ்.தியாகு
பாடல்கள் – ராம்குமார், அனீஷ்
மக்கள் தொடர்பு – வெங்கட்
–