விஜய் ஆண்டனியின் 25-வது படம் ‘சக்தி திருமகன்.’ ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிற, அவரது கரியரில் நிச்சயம் மைல் கல்லாக அமையவுள்ள இந்த படத்தை எதார்த்தமாகவும், வலிமையாகவும் கதை சொல்லும் திறமை கொண்ட இயக்குநர் அருண் பிரபு படத்தை இயக்கவிருக்கிறார்.
வாகை சந்திரசேகர், சுனில் கிரிப்லானி, செல் முருகன், த்ருப்தி ரவீந்திரன் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் கேசவ் ஆகிய திறமையானவர்கள் நடித்திருக்றார்கள்.
படம் குடும்பம், ஆக்ஷன், மாஸ் மற்றும் உணர்வுகள் சூழந்த கதையாக இருப்பதால் நிச்சயம் ரசிகர்களுக்கு நல்லதொரு திரை அனுபவத்தைக் கொடுக்கும் என நம்பலாம்.
அருண் பிரபு இயக்கிய ‘அருவி‘, ‘வாழ்‘ உள்ளிட்ட படங்கள் இப்போதும் தமிழ் சினிமாவின் தனித்துவமான கதைகளாகக் கொண்டாப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் சக்தி திருமகனும் ஆழமான கதையுடன் கூடிய ஆக்ஷன் மாஸ் படமாக இடம் பெறும். படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிக்க, மீரா விஜய் ஆண்டனி வழங்குகிறார்.
பட வெளியீட்டுக்கு முந்தைய போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது. மற்ற விவரங்கள் விரைவில்…


