Home சினிமா அன்று சூப்பர் ஸ்டார் ரஜினி, இன்று ‘செந்தமிழன்’ சீமான்… கிரைம் திரில்லராக மலையாளத் திரைப்பட பாணியில்...

அன்று சூப்பர் ஸ்டார் ரஜினி, இன்று ‘செந்தமிழன்’ சீமான்… கிரைம் திரில்லராக மலையாளத் திரைப்பட பாணியில் உருவாகும் ‘சீமானின் தர்மயுத்தம்.’

செந்தமிழன் சீமான், ஆர்.கே. சுரேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, மலையாளத் திரையுலகில் பிரபலமான அனு சித்தாரா நாயகியாக
நடிக்கும் படம் ‘தர்மயுத்தம்.’

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படத்தின் தலைப்பில் உருவாகும் இந்த படம் ஒரு கொலை அதன் பின்னணி மர்மங்கள், அது தொடர்பான சம்பவங்கள் என இன்வெஸ்டிகேசன் கிரைம் திரில்லராக மலையாளத் திரைப்பட பாணியில் வளர்ந்துள்ளது.  படத்தை இரா.சுப்ரமணியன் எழுதி இயக்கியிருக்கிறார்.

இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், வெற்றிக் குமரன் , சாட்டை துரை முருகன், ஜெயக்குமார், ஆதிரா பாண்டியலட்சுமி, சௌந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம், திண்டுக்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம, நகர்ப் புறங்களிலும் நடந்து முடிந்துள்ளது. படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

‘தப்பாட்டம்’, ‘ஆண்டி இண்டியன்’, ‘உயிர் தமிழுக்கு’ ஆகிய வெற்றிப் படங்களைத்
தொடர்ந்து இயக்குநர், தயாரிப்பாளர் மூன் பிக்சர்ஸ் ஆதம் பாவா மற்றும்
பிளானெட் 9 பிக்சர்ஸ் மருத்துவர் இரா.க. சிவக்குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.

‘பரதேசி’, ‘தாரை தப்பட்டை’, ‘ஜோக்கர்’, ‘டூ லெட்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தொடர்ந்து செழியன் ஒளிப்பதிவு செய்ய,

‘சீதா ராமம்’, ‘சித்தா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து விஷால் சந்திரசேகர் இசையமைக்க , கவிப் பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார்.

படத்தின் தொகுப்பாளாராக புவன் சீனிவாசனும், கலை இயக்குநராக மாயப்பாண்டியும், தயாரிப்பு நிர்வாகியாக முத்.அம்.சிவக்குமாரும் பணிபுரிந்துள்ளனர். மக்கள் தொடர்பாளராக ஆ.ஜான் செயல்படுகிறார்.

..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்