ZEE5 வெளியீடாக 2025 ஜூலை 18 ல் வெளியான ‘சட்டமும் நீதியும்’ வெப் சீரிஸில் நடிகர் சரவணன், நம்ரிதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த சீரிஸ் மூலம் ஹீரோவாக திரும்பியிருக்கிறார் சரவணன்.
அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார். உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை மிக்க படைப்பாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.
கடந்த ஜூலை 18-ம் தேதி வெளியான இந்த சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சீரிஸ் வெளியான வேகத்தில் 72 மணிநேரத்தில் 51 மில்லியன் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இந்த சீரிஸ் குரலற்றவர்களின் குரல் எனும் கருத்திலிருந்து உருவாகியுள்ளது. நம்மைச் சுற்றியுள்ள பலர் தங்களது குரலை வெளிப்படுத்த முடியாமல் அமைதியாக இருக்கும்போது, அந்த அமைதியை உடைத்து, தனது உரிமைக்கும் மற்றொருவரின் நலனிற்காகவும் நிற்கும் ஒரு சாதாரண மனிதரின் கதைதான் இது.
புதுமையான, தனித்துவமான விளம்பரங்கள், மக்கள் மத்தியில் சீரிஸ் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. மக்களை பார்க்கத் தூண்டும் வகையில், ZEE5 ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் முதல் எபிஸோடை, இலவசமாக வழங்கி வருகிறது. இதன் மூலம் சந்தாதரர்கள் அல்லாத அனைவரும் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் முதல் எபிஸோடை கண்டுகளிக்கலாம்.