‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’ சினிமா விமர்சனம்

மோசமான படம், ஆபாசக் குப்பை, கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் படைப்பு என்றெல்லாம் யாரும் குரல் கொடுத்து கோஷம் போடக்கூடாதென்று, டிரெய்லரிலேயே இது ஏடாகூடமான ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ டைப் படம்தான் என்பதை எடுத்துக் காட்டி, சென்ஸாரில் ‘ஏ’ சர்டிஃபிகேட் பெற்று திரைக்கு வந்திருக்கிற ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி.’

சிவனேன்னு இருக்கிற இளைஞன் சிவாவுக்கு ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு டீச்சருடன் கசமுசா சம்பவம் நடக்கிறது. அடுத்து ஒரு ஆண்டியிடம் ஆண்மையைப் பரிமாறுகிற சூழ்நிலை அமைகிறது. ‘ஆஹா செம மேட்டரா இருக்கே, அடுத்து என்ன?’ என்ற எதிர்பார்ப்போடு நிமிர்ந்து உட்கார்ந்தால் அவன் காதலிக்கும் பெண்ணுடனும் ஜாலியாய் முடிகிறது ஜோலி.

அவன் அவளை உண்மையாக காதலிப்பதால், டீச்சருடன் டீலிங், ஆன்ட்டியுடன் அந்தரங்கம் என கடந்தகால வரலாற்றையெல்லாம் மூடி மறைக்காமல் சொல்கிறான். அவள் ‘நடந்தது நடந்ததாக இருக்கட்டும்; இனி எதுவானாலும் நமக்குள்ளேயே நடக்கட்டும்’ என்கிற முடிவுக்கு வந்து அவனுக்கு கழுத்தை நீட்டுகிறாள்.

சிவா நல்லவன்தான். ஏற்கனவே நடந்த எக்குத்தப்பான விஷயங்களெல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலையால்தான். இப்போதுதான் அவனுக்கு கல்யாணமாகி விட்டதே. இனி அவன் ஒழுங்காக இருப்பான் போலிருக்கிறது என்று நினைத்தால், ‘அப்படியெல்லாம் விட்டுவிடுவோமா, நெவர்’ என, அவனை அனுபவித்த டீச்சரும் ஆன்ட்டியும் மீண்டும் ஃபிரேமில் வந்து அவனை வரிந்துகட்டி வட்டமிடுகிறார்கள். சிவா அவர்களிடம் சிக்கினானா,  தப்பினானா என்பது ‘ச்சீ’ என முகம்சுளிக்கும்படியான காட்சிகளோடு  ஜி ராஜசேகர் இயக்கியிருக்கும் இந்த சதையும் சதை சார்ந்த படத்தின் மிச்சமீதிக் கதை… அடுத்த பாகமும் இருக்கிறது. ஜாக்கிரதை.

ஒன், டூ, திரி என மூன்று பேருடன் மேட்டர் முடிப்பவராக திரிகுண். ‘மனுஷன் வாழ்றான்யா’ என படம் பார்க்கும் அனைவரும் மெருமூச்சு விடும்படியான கதாபாத்திரம். மேன்லியாக இருக்கும் அவர் ‘அனுபவித்து’ நடித்திருக்கிறார்.

அவரது காதலியாக வருகிற ஸ்ரீஜித்தா கோஷ், தன்னிடமிருக்கும் இளவயது இளமையை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு காட்டியிருக்கிறார்.

டீச்சராக இனியா. தளதள தேகம் அலுங்கிகுலுங்க வலம் வரும் அவருக்கான காட்சிகள் ‘இந்த கவர்ச்சி போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?’ என்று கேட்பது போலிருக்கிறது. அம்மணி அந்தளவுக்கு தாராளமாக காட்டியிருக்கிறார்.

கதாநாயகன் ஏறிப் பயணிக்கும் சுந்தரா டிராவல்ஸாக ராதா. அவரது உடலில் மிதமான கவர்ச்சியும் விழிகளில் மிதமிஞ்சிய கிறக்கத்தையும் பார்க்க முடிகிறது.

தம்பி ராமையாவும் சத்யனும் மாமனார், மருமகன் உறவு முறை. பேச்சும் செயல்பாடுகளும் அந்த உறவை கொச்சைப்படுத்துவது போலிருந்தாலும் கதையோட்டத்தில் மூழ்கியபடி பார்த்தால் ரசிக்கலாம். தெலுங்கு தேச ஆலி ஒன்றிரண்டு காட்சிகளில் எட்டிப் பார்த்து போதையில் சலம்பி கலகலப்பூட்ட,  அவருக்கு ஜோடியாக வருகிற லேடியின் உடல்மொழியும் டயலாக் டெலிவரியும் ‘படத்துக்கு டபுள் ஏ சர்டிஃபிகேட் கொடுத்திருக்கலாம்’ என நினைக்க வைக்கிறது.

பரிகார பூஜைகள் செய்யும் ஜோதிடராக ஜாவா சுந்தரேசன், டாக்டராக மதன்பாப் இன்னபிற கேரக்டர்களில் விஜய் டிவி தனசேகர், வினோத், ரகு பாபு உள்ளிட்டோர் கதையில் கலந்திருக்கிறார்கள்.

அருணகிரி இசையில் பாடல்கள் உற்சாகமூட்டாமல் விடாது. பாடல்களுக்கான ஆட்டமெல்லாம் 100% அசைவம்தான். ஒளிப்பதிவு நேர்த்தி.

ஸ்வீட்டி நாட்டி கிரேசி – ஒரு ஆணும் மூன்று பெண்களும்!

-சு.கணேஷ்குமார்

REVIEW OVERVIEW
'ஸ்வீட்டி நாட்டி கிரேஸி' சினிமா விமர்சனம்
Previous articleபூக்கி சினிமா விமர்சனம்
s-380மோசமான படம், ஆபாசக் குப்பை, கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் படைப்பு என்றெல்லாம் யாரும் குரல் கொடுத்து கோஷம் போடக்கூடாதென்று, டிரெய்லரிலேயே இது ஏடாகூடமான 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து' டைப் படம்தான் என்பதை எடுத்துக் காட்டி, சென்ஸாரில் 'ஏ' சர்டிஃபிகேட் பெற்று திரைக்கு வந்திருக்கிற 'ஸ்வீட்டி நாட்டி கிரேஸி.' சிவனேன்னு இருக்கிற இளைஞன் சிவாவுக்கு ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு டீச்சருடன் கசமுசா சம்பவம்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here