சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘சூர்யா 45’ படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. படத்தை தமிழில் மிகச்சிறந்த தரமான திரைப்படங்களைத் தொடர்ந்து வழங்கி வரும் முன்னணி நிறுவனமும் ’ஜோக்கர்’, ’அருவி’, ’தீரன் அதிகாரம் ஒன்று’, ’கைதி’, ’சுல்தான்’, ’கணம்’ மற்றும் ’ஃபர்ஹானா’ போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பிளாக்பஸ்டர்களை உருவாக்கிய புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமுமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
ஒரு வருடத்திற்கும் மேலாக, இந்த படத்தின் பரபரப்பான திரைக்கதையை உருவாக்கி ஆர் ஜே பாலாஜி இந்த படத்தின் முன் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். படப்பிடிப்புக்கான இடங்களை பல இடங்களுக்குச் சென்று தேர்வு செய்து வருகிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.