ராஜ பார்வை, பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும் சின்ன வாத்தியார், காதலா! காதலா, லிட்டில் ஜான், மும்பை எக்ஸ்பிரஸ் என திரையுலகின் கவனம் ஈர்த்த சிங்கீதம் சீனிவாசராவ் 94-வது வயதில் இயக்கியிருக்கும் படம்.
தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை கதாநாயகனாகியிருக்கிற சிங் கீதம்.
சுரங்க கிராமமான குபேரபுரத்தின் வறட்சி, பேராசை, சுற்றுச்சூழல் அழிவு என சிலபல விஷயங்களை சுற்றிச் சுழல்கிற சயின்ஸ் பிக்சனாக, சினிமா மீதான ஒரு மாபெரும் கலைஞனின் காதலை வெளிப்படுத்தும் படைப்பாக ‘சிங் கீதம்.’
சிறப்புத் தோற்றத்தில் விஜய் தேவரகொண்டா, சைலஜா என்கிற முக்கியமான கேரக்டரில் நிவேதா பெத்துராஜ் என பிரபலமானவர்களுடன் பிரதான கதாபாத்திரத்தில் அயான் கே, அஹில்யா பம்ரூ, ஷாலினி கொண்டெபுடி, துளசி சிவமணி, பானர்ஜி, சிவன்நாராயணா நாரிபெட்டி, அகு ஸ்டான்லி சிடோசி என புதியவர்கள் எளிமையான நடிப்போடு வலம் வர, கமர்ஷியல் சாகசங்களைத் தாண்டி ஒரு புதிய மாயாஜால உலகத்தை பார்வையாளர்களுக்குக் கடத்தும் திரைக்கதையில் 80% காட்சிகள் பாடல்களால் நிரம்பித் தளும்புகின்றன.
இரண்டாம் பாதியில் உணர்வுபூர்வமான சில காட்சிகளும் அதற்கான பின்னணியும் படத்தை தாங்கிப் பிடிக்கின்றன. கிராபிக்ஸ் காட்சிகள் இன்னும் தரமாக இருந்திருக்கலாம்.


