‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் அலெக்ஸ் பாண்டியன், தனது அடுத்த படைபின் தலைப்பான ‘ஸ்கார்’ (தழும்பு) எனும் திரைப்படத்தை இயக்கத் தயாராகி வருகிறார்.
ஸ்ரீ லக்ஷ்மி ட்ரீம் பேக்டரி சார்பில் டாக்டர் ஆர்.பிரபாகர் ஸ்தபதி மற்றும் ஜி மீடியா ஃபிலிம் பேக்டரி இணைந்து இந்தப் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் பூஜை ஜூன் 25 அன்று கோவை மருதமலை முருகன் கோவிலில் நடைபெற்றது
இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான நடிகர் தேர்வு (Audition) தற்போது சென்னை கோவை, திருச்சி மற்றும் மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு குறித்துப் பேசிய படக்குழுவினர், ஆகஸ்ட் முதல் வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஊட்டி,கேரளா வயநாடு, பெங்களூரு மற்றும் கனடா போன்ற பல்வேறு இடங்களில் படப்பிடிப்புகள் நடைபெற உள்ளன.
திரைப்படத்தின் முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் மற்றும் படத்தின் டைட்டில் டீஸர் ஆகியவற்றை, வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட தயாரிப்பு நிறுவனம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


