Home பொது சூப்பர் ஸ்டாரின் தர்மனில் இணைந்த ஸ்ரீலீலா!

சூப்பர் ஸ்டாரின் தர்மனில் இணைந்த ஸ்ரீலீலா!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படமான ‘தர்மன்’ படக்குழுவில் மற்றொரு அசாத்திய திறமைசாலியான ஸ்ரீலீலா இணைந்திருப்பது, இத்திரைப்படத்தின் உலகம் பிரகாசமாகவும், பிரம்மாண்டமாகவும் விரிவடைவதுடன், ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் மேலும் உயர்த்தியுள்ளது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கம், அனிருத் ரவிச்சந்தரின் இசை, அன்பரிவின் சண்டை பயிற்சி என புகழ்பெற்ற கலைஞர்களின் சக்திவாய்ந்த கூட்டணி, தொலைநோக்கு பார்வை கொண்ட கதைசொல்லல் மற்றும் தொழில்நுட்ப நேர்த்தி ஆகியவற்றோடு உருவாகும் ‘தர்மன்’, திரை ரசிகர்களுக்கு பெருவிருந்தாக தயாராகி வருகிறது.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா சார்பில் திரு. கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்கும் ‘தர்மன்’, தொடர்ந்து பல நட்சத்திரங்களை கூட்டணியாக இணைத்து தன் பயணத்தைத் தொடர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்