Home பொது சண்முக பாண்டியன் நடிக்கும் வாணவேடிக்கை திரைப்படத்தில் வில்லனாக களமிறங்குகிறார்  இயக்குநர் மோகன் ராஜா!

சண்முக பாண்டியன் நடிக்கும் வாணவேடிக்கை திரைப்படத்தில் வில்லனாக களமிறங்குகிறார்  இயக்குநர் மோகன் ராஜா!

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சதீஷ் எம்.பி. தயாரிக்கும் ‘வாணவேடிக்கை’ திரைப்படத்தின் ட்ரெய்லரை இன்று ஆர்யா மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் வெளியிட்டனர்.
சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும்  வாணவேடிக்கை திரைப்படத்தை இயக்குனர் திரு இயக்குகிறார். இசை சாம் சி எஸ், ஒளிப்பதிவு அர்வி படத்தொகுப்பு சுதர்சன்.
இப்படத்தில் நாயகியாக ஷிவானி ராஜசேகர் நடிக்க முதன்முறையாக முழு நீள வில்லனாக களம் இறங்குகிறார் இயக்குனர் மோகன் ராஜா, இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன், இந்துமதி, ஜெயப்பிரகாஷ்,  இயக்குனர் தமிழ், சித்ரா லக்ஷ்மன், கிரண், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஸ்டில்ஸ் பாண்டியன், கும்கி அஸ்வின், சாரா, சுபிக்ஷா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சண்முக பாண்டியன் விஜயகாந்த் தோற்றம் இதுவரை அவர் செய்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது, குறிப்பாக நம் பக்கத்து வீட்டு பையனாக நம் முன்னே வந்து எதார்த்தமாய் நிற்கிறார்.
சண்டைக் காட்சிகளில் அப்பாவை நினைவுபடுத்துகிறார்.
அதேபோல் தனி ஒருவன் படத்தில் வரும் அரவிந்த்சாமி கதாபாத்திரத்துக்கு இணையாக இப்படத்தில் மோகன்  ராஜாவின் தோற்றம் அமைந்துள்ளதாக  பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இப்படத்தின் இசை உரிமையை பிரபல ஆடியோ கம்பெனியான ‘லகரி’ பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்