ஸ்கெச்சர்ஸ் பிராண்டின் வேடிக்கை உடற்பயிற்சி போட்டியை துவக்கி வைத்த நடிகை ராஷி கண்ணா! வெற்றி பெறுவோர் ஸ்கெச்சர்ஸ் ஷூ உட்பட பல பரிசுகளைப் பெற வாய்ப்பு!

பிரபல ஸ்கெச்சர்ஸ் நிறுவனம் (The Comfort Technology CompanyTM Skechers) 19.1.2023 அன்று மாலை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகத்தில் ஸ்கெச்சர்ஸ் ‘கோ ரன் பீட் மை ஸ்பீட்’ சேலஞ்ச் என்ற உடற்பயிற்சி சாகச விளையாட்டுக்கு ஏற்பாடு செய்தது.

இது பங்கேற்பாளர்களை டிரெட்மில்லில் ஒரு மணி நேரத்துக்கு16 கிமீ மணி வேகத்தில் 3 நிமிடங்கள் ஓட வைக்கும் சவாலான விளையாட்டு!

சென்னையில் தொடங்கப்பட்ட இந்த Skechers GO RUN Beat My Speed இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் நடத்தப்படவுள்ளது. அதன் மூலம் மக்கள் மத்தியில் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கி ஊக்குவிப்பது ஸ்கெச்சர்ஸ் பிராண்டின் நோக்கம்!

இந்த போட்டியை நடிகை ராஷி கண்ணா கொடியசைத்து துவங்கி வைத்து, தானும் டிரெட்மில்லில் ஓடி, கூடியிருந்த மக்களை உற்சாகப்படுத்தினார்.

மக்களோடு செஃல்பி எடுத்தும், ஸ்கெச்சர்ஸ் பிராண்ட் டி சர்ட் உள்ளிட்ட பொருட்களை பரிசளித்தும் மகிழ்வித்தார்.

அப்போது பேசிய அவர், “ஸ்கெச்சர்ஸ் Skechers GO RUN Beat My Speed Challenge போன்ற ஒரு சுவாரஸ்யமான முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி. நான் எப்போதும் உடற்தகுதியை பேணுவதற்கும் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் இருக்கிறேன். ஓடுதல் மற்றும் நடப்பது போன்ற எளிய பழக்கவழக்கங்கள் எல்லா மாற்றங்களையும் ஏற்படுத்தும் என்று உண்மையிலேயே நம்புகிறேன்.நமது மக்களையும் அவ்வாறே செய்யத் தூண்டுவதற்கு எனக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு இது.  பங்கேற்பாளர்களின் இந்த உற்சாகம் அபரிமிதமாக இருக்கிறது. இந்த முயற்சியின் மூலம் அவர்களின் அன்றாட வாழ்வில் நடைபயிற்சி மற்றும் ஓட்டப் பழக்கத்தை ஏற்படுத்துவதற்கு அதிகமான மக்களை ஊக்குவிக்க முடியும் என்று  நம்புகிறேன்” என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்த ஸ்கெச்சர்ஸ் தெற்காசியா பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் வீரா, “சென்னை மிகவும் உடற்பயிற்சி முன்னோக்கியாக தெரிகிறது, மேலும் உற்சாகமான பங்கேற்பாளர்கள் முன் வந்து தங்கள் உடற்தகுதி அளவை சோதித்து ஸ்கெச்சர்ஸ் கோ ரன் சேலஞ்ச் மூலம் தங்கள் வரம்புகளை உயர்த்துவதைப் பார்ப்பது உற்சாகமாக உள்ளது. ஸ்கெச்சர்ஸ் எப்போதும் சௌக்கிய வாழ்வு மற்றும் உடற்தகுதியை வலுவாக அங்கீகரித்துள்ளது, மேலும் ராஷி உடன் இணைந்து, இந்த சமூக ஈடுபாட்டுடன் கூடிய முயற்சியானது, வாடிக்கையாளர்களை ஒரு ஆரோக்கிய வாழ்க்கை முறையை கடைபிடிக்க ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

இந்த போட்டியில் கலந்துகொள்ள சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகத்திற்கு செல்லுங்கள். (ஜனவரி 19 & 20 தேதிகளில்) மாலை 4 மணியிலிருந்து பங்கேற்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here