நாட்டுக்கெதிரான சதியை முறியடிக்க, சதிகாரர்களை கொன்றழிக்க எந்த லெவலுக்கும் இறங்கிப் போராடுகிற, எடுத்துக் கொண்ட மிஷனுக்காக உயிரையும் விட தயாராகிற ரா உளவாளிகள் இரண்டு பேர்.
அவர்கள், ‘டோக்கு’ என்ற உயிரியல் ஆயுதம் மூலம் லட்சக்கணக்கான மக்களை கொல்லத் துடிக்கும் சைக்கோ’வை அழிக்க களமிறங்க, விரியும் காட்சிகள் ஹாலிவுட் படங்களின் நகலாய் பிரமாண்டம் காட்டுகிறது.
அந்த ஆயுதம் உருவான பின்னணி, அதன் வீரியம், அதை அழிப்பதற்கான முயற்சி, அழிக்கும் விதம் என 3 மணி நேரம் ஓடி முடிகிறது பி எஸ் மித்ரன் இயக்கியிருக்கும் ‘சர்தார் 2.’


