Home விமர்சனம் சொட்ட சொட்ட நனையுது சினிமா விமர்சனம்

சொட்ட சொட்ட நனையுது சினிமா விமர்சனம்

‘சொட்ட’த் தலையர்கள் பெரும் பணக்காரர்களாக, தொழிலதிபர்களாக இருந்தால் அவர்களுக்கு நடிகைகளே மனைவியாக கிடைப்பார்கள். அதுவே எளிய மனிதனாக இருந்தால் அவனுக்கு பெண் கிடைப்பது பெரும் போராட்டமாகி விடும்.

அப்படியொரு போராட்டத்தைச் சந்திக்கிற மனிதனின் கதையாக விரிகிறது ‘சொட்ட சொட்ட நனையுது.’

சொட்டத் தலையோடு பெண் பார்க்கப் போவதும், கேலி கிண்டலுக்கு ஆளாகித் திரும்புவதும், அதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணுக்கு அவனைப் பிடித்துப் போவதும், பின்னர் அந்த பெண்ணை அவன் அருவருப்பாக பார்த்து வெறுக்கும்படி ஒரு ‘மேட்டர்’ நடப்பதும், பிறகு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் துமாக நீளும் காட்சிகளின் தேவைக்கேற்ப கலகலப்பூட்டும்படியும் உணர்வுபூர்வமாகவும் நடித்திருக்கிறார் கதை நாயகன் நிஷாந்த் ரூஷோ.

நாயகனின் இரண்டு ஜோடிகளில் ஒருவரான பிக் பாஸ் வர்ஷினி தன்னைச் சுற்றி நடக்கிற எல்லாவற்றையும் ரீல்ஸ் போடுவதற்கான கன்டென்ட்டாக பார்க்கிற விதமும், ரீல்ஸுக்காக ஆடும் ஆட்டமும் ரசிக்க வைக்கிறது.

இன்னொரு நாயகி ஷாலினியின் ஹோம்லி லுக்கும், புன்னகையும் வசீகரிக்கிறது. கதையின் கனமான எபிசோடுகளை தாங்கிப் பிடிக்கும் நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது.

‘குலுக்கல்’ குமரேசன் என்ற பெயரில் வருகிற ரோபோ சங்கர் லேசாக சிரிப்பூட்டுகிறார்.

கே பி ஒய் யோகி, கே பி ஒய் ராஜா, கே பி ஒய் பிரேம், ஷேக் ஃபரீத், ஆனந்த் பாண்டி ஏகப்பட்ட நடிகர், நடிகைகள் அவரவர் பங்குக்கு காமெடி கலகலப்புக்கு உதவியிருக்கிறார்கள்.

பாடல்களின் இசையை பரவச உணர்வு தருகிற விதமாகவும் பின்னணி இசையை கதையோட்டத்தின் பரபரப்புக்கு ஏற்றபடியும் தந்திருக்கிறார் ரெஞ்சித் உன்னி.

கதாபாத்திரங்களை ஏற்றிருப்போர் உடுத்தியிருக்கிற உடைகளும் காட்சிகளின் பின்னணியும் கலர்ஃபுல்லாக இருக்க, அதன் பொலிவு குறையாமல் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரயீஷ்.

தலையில் முடியில்லாதவன் படும் பாட்டை வைத்து காமெடி கலாட்டாவாக ஒரு படத்தை தமிழ் மக்களுக்கு கொடுக்க நினைத்த இயக்குநர் நவீத் எஸ் ஃபரீத், காமெடியாக சில காட்சிகளையும் காமெடி என்ற பெயரில் பொறுமையைச் சோதிக்கும் பல காட்சிகளையும் கொட்டிக் குவித்திருக்கிறார்.

சொட்ட சொட்ட நனையுது _ கொஞ்சமே கொஞ்சம் சிரிக்க முடியுது!

-சு. கணேஷ்குமார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்