காமெடி படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. அதை மனதில் வைத்து உருவாகியுள்ள படம் ‘வசூல் மன்னன்.’
‘கன்னக்கோல்’ படத்தை எழுதி இயக்கிய வேல் குமரேசன் தனது இரண்டாவது படமாக இந்த படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
படம் பற்றி வேல் குமரேசன் பேசியபோது ஒருவன் தன் வாழ்நாளில் எதை வேண்டுமானாலும் இழக்கலாம், தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடவே கூடாது என்பதை இப்படத்தின் மையக் கருவாக வைத்து, நகைச்சுவையுடன் உருவாக்கி உள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஸ்ரீதேவா கதையின் நாயகனாக பவனி வர, அழகுப் பதுமை நிவேதா அவருக்கு ஜோடியாக வருகிறார். வேல ராமமூர்த்தி, இமான் அண்ணாச்சி , சரவண சுப்பையா, குட்டிப்புலி சரவண சக்தி, ரிந்து ரவி என நிறைய பேர் நடித்துள்ளனர்.
பரணி இசையமைத்து, ஒரு பாடலையும் எழுதியுள்ளார். இன்னொரு பாடலை நா.ப. சுப்ரமணியம் எழுதியுள்ளார். சிவகுமார் ஒளிப்பதிவையும், சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பையும், ராதிகா நடன பயிற்சியையும், சரவணன் கலையையும், கவனித்துள்ளனர். ஈஸ்வர் தயாரிப்பு நிர்வாகத்தையும், ஜவஹர் மாரிமுத்து தயாரிப்பு மேற்பார்வையையும் கவனித்துள்ளனர்.



