‘திரள்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் யோகி பாபு

க்ரைம், த்ரில்லர், ஆக்‌ஷனோடு விறுவிறுப்பாக உருவாகியுள்ள படம் ‘திரள்.’

ரவி பிரகாஷ், யுவன் மயில்சாமி, கிரி மூவரும் கதாநாயகர்களாக நடிக்க, மனோஜ் கார்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில் அல்பியா, மீராராஜ் என இரு கதாநாயகிகள். முக்கிய கதாபாத்திரங்களில் சேரன்ராஜ், சாப்ளின் பாலு, நித்தின், தமிழினி, வெங்கடேஷ் ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

எஸ் எம் தமிழினி புரொடக்சன்ஸ் கே.சசிகுமார், சி பி பிலிம்ஸ் ஆர்.சின்னசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படம் செப்டம்பர் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தை ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் ஜெனீஷ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

ஒளிப்பதிவு அபி ஆத்விக், இசை ஏ.இ.பிரஷாந்த், எடிட்டிங் மனோஜ் கார்த்தி, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here