நடிகர் தேஜ் ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘காதலுக்கு மரணமில்லை’, ‘காந்தம்’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் கதாநாயகனாக நடித்தவர். அவர் இப்போது கன்னடத்தில் ராமாச்சாரி 2.O என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
இந்த படத்தில் மறைந்த பிரபல நடிகர் ராஜ்குமாரின் மகன்களில் ஒருவரும் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் ஆகியோரின் சகோதரருமான ராகவேந்திரா ராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் தேஜ் வில்லனாக நடிக்கிறார். தவிர, தென்னிந்திய மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களும் இதில் நடிக்க இருக்கின்றனர்.
இந்த படத்தை முடித்ததும் மீண்டும் GOD (Glory Of Daemon) என்கிற நேரடி தமிழ்ப் படம் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகிற்கு திரும்புகிறார். ராமாச்சாரி 2.0 படம் வெளியான பின்னர், வரும் 2023 ஜனவரியில் இந்த புதிய படம் துவங்கப்பட இருக்கிறது. படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.