கிராமிய கதையமைப்போடு காதலும், மோதலும் கலந்த அம்மா, மகன் சென்டிமெண்ட் டோடு கூடிய கதை ‘உலகநாதன்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது.
அட்சயன் ஹீரோவாக நடிக்க, ஏ.டி.ஆதிநாடார் மிகுந்த பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு சண்டைப் பயிற்சி மற்றும் படத்தொகுப்பு ஆகியவற்றை ஆ. ஆதவன் கவனிக்கிறார்.
கஞ்சா கருப்பு நகைச்சுவையுடன் கூடிய குணச்சித்திர வேடத்தில் நடிக்க, அட்சயனுக்கு ஜோடியாக யோக தர்ஷினி, கிரேட்டா என்று இரண்டு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள்.
ஹீரோவின் ‘அம்மாவாக விஜய் டி.வி. சசிகலா நடித்திருக்கிறார். வில்லன்களாக கடற்கரை, நாகராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கதாநாயகன் முறையாக சிலம்பம் கற்றவர் என்பதால் சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் மதுரை, மற்றும் ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.
நடிகர் சார்லஸ் தனா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை சார்லஸ், ஆதிநாடார் ராமநாதன், ஆதவன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் படத்தை விரைவில் வெளியிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது படக்குழு.