ஒரு கோடி பார்வை நிமிடங்களைக் கடந்த ‘உடன்பால். ‘ ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் சாதனை!

அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில், சார்லி, ‘சேதுபதி’ பட புகழ் நடிகர் லிங்கா, நடிகை காயத்ரி, நடிகை அபர்னதி, விவேக் பிரசன்னா, KPY தீனா, நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் நடிப்பில் ஆஹா தளத்தில் வெளியான திரைப்படம் ‘உடன்பால்.’ இன்றைய சமூகத்தில் உறவுகள் பணத்திற்காக எந்த எல்லை வரை செல்கிறார்கள் என்பதை ரசிக்கும்படி  ப்ளாக் காமெடியில் சொல்லியிருந்தது இந்த படம்.

தாய் தந்தையிடம் பிள்ளைகள் எவ்வாறு நடந்த கொள்ள வேண்டும் என்பதை அழுத்தமாக சொல்லும் விதத்தில் இருந்தது இந்த படத்தின் கதைக்களம்!விமர்சகர்களின் பாராட்டை குவித்த இப்படம், குடும்ப பார்வையாளர்களின் பெரும் வரவேற்பில் ஆஹா தமிழ் தளத்தில் 1 கோடி நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழுவினர் ஆஹா தளத்தின் குழுவினரோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். ரசிகர்களுக்கும் விமர்சகர்களுக்கும் நன்றியினை தெரிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here