Home சினிமா சேலம் வேங்கை அய்யனார் தயாரிப்பில் அம்மா சென்டிமென்ட், காதல், வீரம், விவேகத்துடன் உருவான ‘வெட்டு’ மார்ச்...

சேலம் வேங்கை அய்யனார் தயாரிப்பில் அம்மா சென்டிமென்ட், காதல், வீரம், விவேகத்துடன் உருவான ‘வெட்டு’ மார்ச் 28-ல் ரிலீஸ்!

அம்மா சென்டிமென்ட், காதல், வீரம், விவேகம் என மண் சார்ந்த கதைக்களத்தில் உண்மை சம்பவ பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘வெட்டு.’

இந்த படம் வரும் 28ம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, கஸ்தூரிராஜா, அம்மா ராஜசேகர், நடிகர்கள் ராகின் ராஜ், சேலம் வேங்கை அய்யனார், பிரேம்நாத், ரவிமரியா, முத்துக்காளை, கிங்காங், விஜய் கணேஷ், கராத்தே ராஜா, காஜா செரிப், நடிகைகள் வனிதா விஜயகுமார், விஜி சந்திரசேகர், சுந்தரா டிராவல்ஸ் ராதா உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த படம் ஸ்ரீ பூவாயி அம்மன் மூவிஸ் சார்பில் சேலம் வேங்கை அய்யனார் தயாரிப்பிலும், பிரேம்நாத் இணைத் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது.

மதுரையை சார்ந்த அம்மா ராஜசேகர், நடன இயக்குநராக தமிழில் பல படங்களுக்கு பணிபுரிந்து, தெலுங்கு திரையுலகில் 300 படங்களுக்கு நடன இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.

கோபி சந்த் நடிப்பில் ரணம் என்ற பெயரில் முதல் படம் தெலுங்கில் இயக்கி, மெகா ஹிட் கொடுத்தவர். தொடர்ந்து தனது இயக்கத்தில் 12வது படமாக, தனது 17 வயது மகன் ராகின் ராஜை ஆக்ஷன் ஹீரோவாக்கி, தலா என்ற தெலுங்கு படத்தை சென்ற மாதம் வெளியிட்டார். அந்த படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ‘வெட்டு’ என்ற பெயரில் தயாராகியுள்ளது.

17 வயது பையன் செய்யும் மாபெரும் சம்பவம் தான் படத்தின் கதை.

கதாநாயகனான் ராகின் ராஜுக்கு ஜோடியாக அங்கிதா நடிக்கிறார். இவர்களுடன் சேலம் வேங்கை அய்யனார், பிரேம்நாத், ரோகித் எஸ்தர், அவினாஷ், விஜி சந்திரசேகர், சுந்தரா டிராவல்ஸ் ராதா, இந்திரஜா ஆகியோர் நடிக்கிறார்கள்.

படக்குழு:-

கதை, திரைக்கதை, இயக்கம்: அம்மா ராஜசேகர்

இசை: எஸ்.எஸ்.தமன்

பாடல்: டி.ராஜேந்தர்

ஒளிப்பதிவு: ஷியாம் கே நாயுடு

நடனம்: அம்மா ராஜசேகர்

சண்டை பயிற்சி: ஸ்டண்ட் சில்வா, கெவின்,

பிஆர்ஓ: கோவிந்தராஜ்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்