தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்… ‘வாத்தி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வாத்தி.‘ இந்த படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். வெங்கி அட்லுரி இயக்கியுள்ள இந்த படத்தை ‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சூர்யதேவர நாக வம்சி, ‘ ஃபார்ச்சூன் 4 சினிமாஸ்’ சாய் சௌஜன்யாவுடன் இணைந்து தயாரித்துள்ளார்.
இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழில் டிசம்பர் 2-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது.
அதற்கான அறிவிப்பு புகைப்படத்தில், தனுஷ் ஒரு மேஜையில் அமர்ந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் தன் விரலை மேல் நோக்கி உயர்த்தி, படத்தின் வெளியீட்டு  நாளை காட்டுவது போல் இருக்கிறது!
தனுஷின் பின்புறம் உள்ள கரும்பலகையில், பல்வேறு கணித சமன்பாடுகள் மற்றும் அவரது அருகில் ஒரு புத்தகமும் வைக்கப்பட்டுள்ளது. தனுஷ் தன்னுடைய சாதாரண தோற்றத்தில் மிக எளிமையாக காணப்படுகிறார். தேதியை குறித்துக் கொள்ளுங்கள், வாத்தி வருகிறார் பாடம் எடுக்க, 2ம் டிசம்பர் 2022 முதல் என்பதனை படக்குழுவினர் அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.
படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியான நிலையில், ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
படக்குழு:-

தனுஷ், சம்யுக்தா மேனன், சாய்குமார், தனிக்கெல்லா பரணி, சமுத்திரகனி, தொட்டபள்ளி மது, நரா ஸ்ரீநிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, சரா, ‘ஆடுகளம்’ நரேன், இளவரசு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஹரிஷ் பேரடி, பிரவீனா…
எழுத்து, இயக்கம்          :   வெங்கி அட்லுரி
தயாரிப்பு                                      :  நாக வம்சி எஸ், சாய் சௌஜன்யா தொகுப்பாளர் நவீன் நூலி
ஒளிப்பதிவாளர்                          :  ஜே யுவராஜ்
இசை                                              :  ஜிவி பிரகாஷ் குமார்
தயாரிப்பு வடிவமைப்பாளர்     : அவிநாசி கொள்ளா சண்டை பயிற்சி வெங்கட்
பேனர்ஸ்                                         :  சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், ஃபார்ச்சூன் போர் சினிமாஸ்
வழங்குபவர்                                 :  ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ்
மக்கள் தொடர்பு                          :  ரியாஸ் K அஹமத்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here