ரொமான்டிக் காமெடி என்டர்டெய்னராக உருவாகி வருகிற, ‘பிக் பாஸ்’ விக்கல்ஸ் விக்ரம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் அறுபது சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு, படக் குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கே. சி. குரு இயக்கும் இந்த படத்தில் விக்கல்ஸ் விக்ரம் – ஆர்த்தி கிருஷ்ணா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த நிலையில், தற்போது 30 நாட்கள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், சென்னை மற்றும் பெங்களூருவில் நடைபெற்ற இரண்டு கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்து, மொத்த படப்பிடிப்பில் 60% பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
ஸ்டாண்ட் அப் காமெடியன் விக்கல்ஸ் விக்ரம் – பிட்னெஸ் மாடல் ஆர்த்தி கிருஷ்ணா ஆகிய இருவரும் எதிரும் புதிருமாக இணைந்திருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


