‘வதந்தி’ வலைத்தொடருக்கு உலக இசைக் கலைஞர்கள், பாடகர்கள் 100 பேரை இணைத்து இசையமைப்பு! சைமன் கே. கிங் அசத்தல்!

‘கொலைகாரன்’, ‘கபடதாரி’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து கவனம் ஈர்த்த சைமன் கே. கிங், சமீபத்தில் ‘பேப்பர் ராக்கெட்’ எனும் வலைத்தொடருக்கும் இசையமைத்திருந்தார். அவர், ‘வதந்தி’ எனும் அமேசான் பிரைம் த்ரில்லர் வலைத் தொடருக்கு இசையமைக்க ‘கொலைகாரன்’ பட இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸுடன் மீண்டும் இணைந்துள்ளார்.ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்டில் இந்த தொடருக்காக  பின்னணி இசை மற்றும் டைட்டில் ட்ராக்கை  பதிவு செய்தார். இதற்காக, 100 இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களுடன் இணைந்து வதந்தியின் முழு ஒலிப்பதிவுக்கும் இசையமைத்துள்ளார். பிரத்தியேகமாக ஒரு வகையான டைட்டில் ட்ராக்கும் இயற்றியுள்ளார். இந்தப் பாடலின் வரிகளை எழுதிய பாடலாசிரியர் கு. கார்த்திக், பண்டைய தமிழ் இலக்கிய உரையைப் பயன்படுத்தியுள்ளார். தவிர 40 உறுப்பினர்களைக் கொண்ட இந்தியாவைச் சேர்ந்த பாடகர்கள் குழு டைட்டில் ட்ராக்கை வழங்கியுள்ளது.உலகெங்கிலும் உள்ள பல குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப வல்லுநர்களும் பங்கேற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here