சதுரங்க விளையாட்டில் அர்ஜுனா விருது! வேலம்மாள் பள்ளி மாணவருக்கு அமைச்சர் தலைமையில் பாராட்டு, பரிசளிப்பு!

சமீபத்தில் நமது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த விளையாட்டு விருதான அர்ஜுனா விருதைப் பெற்றார், சென்னை வேலம்மாள் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஜி.எம். ஆர். பிரக்ஞானந்தா. அவருக்கு 7.1122022 அன்று சென்னை முகப்பேர் வேலம்மாள் முதன்மைப் பள்ளி வளாகத்தில் பிரமாண்டமான பாராட்டு விழா நடைபெற்றது.விழாவில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர்
சிவமெய்யநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சதுரங்கப் போட்டியின் அடையாளமாகத் திகழும் பிரக்ஞானந்தாவுக்கு, பள்ளியின் மூலம்
வழங்கப்படும் ரூபாய் 7 லட்சம் பரிசுத்தொகையினை
வழங்கி பாராட்டி பெருமைப்படுத்தினார். சர்வதேச அளவில் அளப்பரிய சாதனை படைத்த மாணவரை பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here