தலைவர்கள், அறிஞர்கள் என பிரபலங்களின் சிலைகளை புதிய தொழில்நுட்பத்தில் கல் சிலையாக வடிப்பதில் புகழ்பெற்றது SILAII (சிலை) நிறுவனம்.
அந்த நிறுவனம் திருவள்ளுவர் சிலையை ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறைக்கும் கொண்டு சேர்ப்பதன் மூலம், அவர் குறள் மூலம் வலியுறுத்திய வாழ்க்கையை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி, அவரது கருத்துக்களை பின்பற்ற வைக்கலாம் என்ற நோக்கத்தில் வள்ளுவர் சிலையை உருவாக்கி மிகக்குறைந்த விலையில் வழங்க முன்வந்துள்ளது.
இந்த திட்டத்தின் துவக்கமாக முதல் வள்ளுவர் சிலை மக்கள் செல்வன் விஜய்சேதுபதிக்கு அளிக்கப்பட்டது.
இந்த திட்டத்தில் 50,000 வது சிலையை கன்னியாகுமரி வள்ளுவர் சிலையின் அடிவாரத்திலும், 1 லட்சமாவது சிலையை மயிலாப்பூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கையால் மிகப்பெரும் விழாவில் வழங்கி, சிலைகள் வாங்குபவர்களை கௌரவிக்க உள்ளனர்.
அனைவருக்கும் பரிசாக வழங்கக்கூடிய இந்த சிலைகள் ரூபாய் 499 ல் துவங்கி ரூ 4999 வரை பல்வேறு விலைகளில், அளவுகளில் கிடைக்கும்.
சிலைகளை WWW.SILAII.COM என்ற இணையதளம் மூலம் ஆர்டர் செய்து பெறலாம்.

