விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் பூஜையுடன் துவங்கியது.
‘ராஜா வாரு ராணி காரு’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் ரவி கிரண் கோலா இந்த படத்தை இயக்குகிறார்.
படத்தின் பூஜையின்போது துவக்க காட்சிக்காக பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கிளாப் அடிக்க, தயாரிப்பாளர் நிரஞ்சன் ரெட்டி கேமராவை ஆன் செய்தார். இயக்குநர் ஹனு ராகவபுடி முதல் காட்சியை இயக்கினார்.
கிராம பின்னணியிலான ஆக்சன் டிராமா கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 16 முதல் தொடங்குகிறது.
இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரிக்கின்றனர்.