Home சினிமா இந்த படம் மக்கள் மனசுக்குள்ள ஒரு இடத்தை பிடித்திருக்கிறது; அதுவே எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி!...

இந்த படம் மக்கள் மனசுக்குள்ள ஒரு இடத்தை பிடித்திருக்கிறது; அதுவே எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி! -‘வித் லவ்’ படத்தின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் நடிகர் அபிஷன் ஜீவிந்த் 

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நடித்துள்ள ‘வித் லவ்’ திரைப்படம் கடந்த 2026 பிப்ரவரி 6-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி பெரியளவில் வரவேற்பு பெற்றுள்ளது. அதையடுத்து படக்குழுவினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய நடிகர் அபிஷன் ஜீவிந்த் “ரஜினி சார் சொன்ன அந்த ஒரு வார்த்தை தான் என்னை ஹீரோவாக இந்த முடிவை எடுக்கவும், அதில் நம்பிக்கை வைக்கவும் காரணமாயிருந்தது. இப்போ அவரை மீட் பண்ணும்போது, ‘ஹீரோ ஆகிட்டீங்க’ன்னு அவர் திரும்ப சொன்னது… அந்த சர்கிள் கம்ப்ளீட் ஆன மாதிரி சந்தோஷமாக இருந்தது.

நீங்கள் படத்தை அழகாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தீர்கள். நல்ல ரிவ்யூஸ், நல்ல வார்த்தைகள் – அதுதான் இந்த வெற்றிக்கு காரணம். அதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி.

என்னை ஹீரோவாக நம்பி இந்த இடத்துல நிற்க வைத்ததுக்கு மதனுக்கு ரொம்ப பெரிய நன்றி. உன்னை இந்த மேடையில் பார்க்க பெருமையாக இருக்கிறது. இந்த பயணம் இன்னும் பெரியதாக இருக்கும் வாழ்த்துக்கள். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் குறித்து,“எப்போதும் எனக்கு கூடுதலாக வேலை செய்வார். ‘அபிக்காக இதை இன்னும் நல்லா பண்ணலாம்’ன்னு சொல்ற அந்த மனசு ரொம்ப ஸ்பெஷல். புகழை கூட அழகாக, ஈகோ இல்லாமல் கொடுக்கத் தெரிந்தவர், அவருக்கு நன்றி. பாடலாசிரியர் மோகன், எடிட்டர் சுரேஷ், ஸ்ரேயாஸ், தொழில்நுட்ப குழுவினர் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி. அனஸ்வரா எங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி ரொம்ப அழகாக ஒர்க் ஆனது. ஆடியன்ஸ் அதை ரொம்ப ரசிக்கிறார்கள். இந்த கூட்டணி அடுத்தும் தொடரும். காவியா, சச்சின், தேனி முருகன், சரவணன், ஆனந்தி உள்ளிட்ட நடிகர்கள் அனைவருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் மகேஷ் அண்ணா படம் ஹிட் ஆன பிறகும், ‘நான் எதாவது தவறு பண்ணினேனா ? ன்னு கேட்கும் அந்த மனசு எல்லாருக்கும் கிடைக்காது. அவர்கிட்ட பேச எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. அது தான் இந்த உறவின் அழகு. அவருக்கு என் நன்றிகள்.

சௌந்தர்யா மேம் படம் வெளியான பிறகு சக்ஸஸ் இப்படித்தான் இருக்குமா என்று அவர் சொன்ன அந்த வார்த்தை எனக்கு ரொம்ப சந்தோஷம் கொடுத்தது. மகேஷ் அண்ணா சௌந்தர்யா மேம் நான் மூன்று பேரும் இணைந்து அடுத்து ஒரு பெரிய படம் செய்கிறோம். இந்த படம் இன்றைக்கு மக்கள் மனசுக்குள்ள ஒரு இடத்தை பிடித்திருக்கிறது. அதுவே எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இந்த பயணத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் என் மனப்பூர்வமான நன்றி” என்றார்.

இயக்குநர் மதன் ”எல்லாருமே இந்த படம் கண்டிப்பா ஒரு வெற்றி படம் என சொன்னார்கள். அதே போல படம் வெற்றியடைந்தது உண்மையிலேயே எங்களுக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி.மகேஷ் சார், சௌந்தர்யா மேடம், இருவருக்கும் பெரிய நன்றி. அதே மாதிரி சரவணன் சார் டீம் உட்பட, இந்த படத்துக்காக உழைத்த எல்லாருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள். தூக்கமில்லாமல் இப்படத்திற்காக உழைத்த என் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தை கொண்டாடிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் சரவணன், நடிகர் சச்சின், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்,நடிகை ஆனந்தி, நடிகை காவ்யா, எடிட்டர் சுரேஷ், பாடலாசிரியர் மோகன்ராஜன், தயாரிப்பாளர் மகேஷ், தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்