குறட்டையை மையமாக வைத்து விநாயக் சந்திரசேகரன் இயக்க, மணிகண்டன், மீதா ரகுநாத் நடிப்பில் உருவான படம் ‘குட் நைட்.’
குறட்டையால் ஒருவனின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை நகைச்சுவையுடன் கையாண்டிருந்தது இந்த படம். கதைநாயகன் மோகனின் குறட்டை சத்தம் அனுவை இரவு முழுவதும் தூங்கவிடாமல் செய்கிறது. இறுதியில், தூக்கமின்மையால் அனுவின் உடல்நிலையைப் பாதிக்கப்படுகிறது, அதனால் அவள் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள். மனைவியின் உடல்நிலையில் அக்கறை கொண்டு மோகன் அடுத்து என்ன செய்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை. சமீபத்தில் தியேட்டர்களில் வெளியாகி பெரியளவில் வரவேற்பு பெற்றது.
நசரத் பாசிலியன், மகேஷ் ராஜ் பாசிலியன் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டனின் அட்டகாசமான இசையும், ஜெயந்த் சேது மாதவனின் கண்கவர் ஒளிப்பதிவும் பலமாக அமைந்தது.
இந்த படம் வரும் ஜூலை 3-ம் தேதியிலிருந்து டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகவிருக்கிறது.


