கன்னடம், தெலுங்கு உட்பட பத்துக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள மனோஜ், தமிழில் நாயகனாக அறிமுகமாகும் படம் ‘P -2′
சமீபத்தில் வெளியான யாத்திசை படத்தில் நடித்த சித்து குமரேசன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் இளவரசு, ராஜசிம்மன், சம்பத்ராம், தீபா, மஸ்காரா அஸ்மிதா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
சிவம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க, தேனிசை தென்றல் தேவா இசையமைக்கிறார்.
தயாரிப்பாளரும் திரைப்பட விநியோகஸ்தருமான சி என் ரவிகுமார் இன்று இசையமைப்பாளர் தேவாவின் ஸ்டுடியோவில் இந்த படத்தின் பூஜையுடன் பாடல் பதிவை துவக்கி வைத்தார்.
வித்தியாசமான தலைப்பில் இந்த படத்தை இயக்கும் சிவம் படம் பற்றி பேசியபோது, ‘‘ஹாரர் திரில்லர் சப்ஜெக்டில் நம்பிக்கைத் துரோகத்தை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருக்கிறோம். தேனிசை தென்றல் தேவா இசையமைப்பதால் இந்த படத்திற்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடக்கவிருக்கிறது” என்றார். இயக்குனர் சிவம்.
உருவாக்கத்தில் உறுதுணை:-
தயாரிப்பு – பி. ராமலிங்கம்
ஒளிப்பதிவு – எஸ் ஆர் வெற்றி
பாடல்கள் – சினேகன்
எடிட்டிங் – மாதவன்
ஸ்டண்ட் – ஓம் பிரகாஷ்
நடனம் – ராதிகா, ஜான்
மக்கள் தொடர்பு – மணவை புவன்