ஜூனியர் என்டிஆர், ராம் சரண் கதாநாயகர்களாக நடித்த, எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் கடந்த மே 20-ம் தேதி ஜீ5 தளத்தில் வெளியானது. தற்போது 1000 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் & கன்னடம் என நான்கு மொழிகளிலும் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
இது பற்றி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் கூறும்போது, நீங்கள் அனைவரும் ஜீ5 தளத்தில் வெளியாகியுள்ள ஆர் ஆர் ஆர்’ திரைப்படத்தின் மீது காட்டும் அன்பிற்கு நன்றி. நான்கு மொழிகளிலும் இப்படத்திற்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது” என்றார்.
நடிகர் ராம் சரண் கூறும்போது, ஜீ5-ல் வெளியாகியுள்ள ஆர் ஆர் ஆர்’ மீதான ரசிகர்களின் காதலை கண்டு நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்! தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இப்போது ரசிகர்கள் கொண்டாடுவது மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது. படத்தைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி” என்றார்.
பிரபல கலைஞர்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களின் ஈடுபாட்டை உள்ளடக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலியின் “ஆர் ஆர் ஆர்” அதன் பிரம்மாண்டமான திரைப்படத் தயாரிப்பு பாணி மற்றும் அருமையான காட்சிகள் மூலம் சர்வதேச பார்வையாளர்களை கவர்ந்தது. இந்தத் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் என்ற பெரும் அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளது. தவிர ஜீ5-ல் இப்படத்தின் ஓடிடி பிரீமியர் வெற்றியின் மராத்தான் இன்னும் தொடர்கிறது.