நடிகர் கருணாகரன் தொகுத்து வழங்கும் ‘லிட்டில் சூப்பர் ஹீரோஸ்.’ இளம் திறமையாளர்களை அடையாளம் காட்ட ஜூன் 5 முதல் கலைஞர் தொலைக்காட்சியில்…

கலைஞர் தொலைக்காட்சியில் இளம் திறமையாளர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக நடத்தப்படும் புத்தம் புதிய பிரமாண்ட மேடை லிட்டில் சூப்பர் ஹீரோஸ்.’

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் கருணாகரன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும்.  அந்த திறமையை சரியான நேரத்தில், சரியான வழியில், சரியாக பயன்படுத்தவில்லை எனில் அது தன் மதிப்பை அடையாது. இப்படி இருக்க, குழந்தைகளாக நம் முன் வலம் வரும் இளம் திறமையாளர்களின் திறமைகளை உலகறியச் செய்யும் விதமாக நமது கலைஞர் தொலைக்காட்சியில், முற்றிலும் மாறுபட்ட புத்தம் புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

வீட்டில் சுட்டித்தனம் செய்யும் குழந்தைகளின் அசாத்திய திறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் விதமாக உருவாகும் இந்த நிகழ்ச்சியின் மூலம், பலதரப்பட்ட வித்தியாசமான திறமைகள் உலகத்திற்கு தெரியப்போகிறது.

இந்த நிகழ்ச்சி ஜூன் 5 முதல் ஞாயிறுதோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here