உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட ‘இடிமுழக்கம்’ படத்தின் முதல் பார்வைக்கு (First Look) பெரியளவில் வரவேற்பு… ஜி.வி. பிரகாஷ் – சீனுராமசாமி உற்சாகம்!

ஜி.வி. பிரகாஷ் – காயத்திரி நடிப்பில், சீனுராமசாமி இயக்கத்தில், உருவாகியுள்ள இடிமுழக்கம்’ படத்தின் முதல் பார்வைக்கு (First Look) பெரியளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

முதல் பார்வையை நடிகரும் அரசியல்வாதியுமான ‘மக்கள் அன்பன்’ உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (Skyman Films International) கலைமகன் முபாரக் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தபடம் துவங்கப்பட்டதிலிருந்தே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

வெற்றிப் படங்களைத் தயாரித்து வருகிற கலைமகன் முபாரக், யதார்த்தம் மற்றும் உணர்ச்சிமிக்க கதைக்கருகளை தரும் இயக்குநர் சீனு ராமசாமி, இளைஞர்களின் செல்லப்பிள்ளை GV.பிரகாஷ் கூட்டணியில் உருவாக்கியுள்ள இடிமுழக்கம்’ படத்துக்கு ஏற்பட்டிருக்கும் எதிர்பார்ப்பு படக்குழுவை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

படத்தின் முதல் பார்வை. தனித்துவமான கதைக்கருவை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால் படத்துக்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இப்படத்திற்கு என்.ஆர். ரகுநந்தன் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்வரிகளை எழுதுகிறார். ஜீவி பிரகாஷ் குமார், காயத்திரியுடன்சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ் மற்றும் பல திறமையான நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here