‘மாயோன்’ படத்துக்கு தமிழில் உற்சாக வரவேற்பு… தெலுங்கில் 350க்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீஸ்!

சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடிக்க, அருண்மொழி மாணிக்கத்தின் திரைக்கதை மற்றும் தயாரிப்பில் என். கிஷோர் இயக்கத்தில் உருவான படம் ‘மாயோன்.’

அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்று கலந்தது என்பதை மையக் கருவாகக் கொண்டு உருவாகியிருந்த இந்த படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குடும்பத்துடன் கொண்டாடும் படமாக இடம் பிடித்துள்ளது.

தவிர பார்வையற்றவர்களுக்கான பிரத்தியேகமாக ஆடியோ டிஸ்கிரிப்ஷனுடன் படம் வெளியானதும் மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது.

தமிழகத்தில் கிடைத்த வரவேற்பு காரணமாக இந்த படத்தை வரும் ஜூலை 7-ம் தேதி தெலுங்கில் மிக பிரமாண்டமாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

படத்தை பார்த்த தெலுங்கு விநியோகிஸ்தர் இந்த படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும் என படத்தை 350க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிட போவதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை போலவே தெலுங்கிலும் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here