Home சினிமா லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட, டீஜய் அருணாசலம்  நடிக்கும் ‘உசுரே’ படத்தின்...

லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட, டீஜய் அருணாசலம்  நடிக்கும் ‘உசுரே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!  

டீஜய் அருணாசலம் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் ‘உசுரே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நித்திலன் சாமிநாதன், நடிகர்கள் விஜய் சேதுபதி, சண்முக பாண்டியன் விஜயகாந்த், நடிகை ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் வெளியிட்டனர்.

அறிமுக இயக்குநர் நவீன் டீ கோபால் இயக்கியுள்ள இந்த படத்தை ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்சன்ஸ் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரிக்கிறது.

உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, எதார்த்தமான கதைக்களத்தில் கமர்சியம் அம்சங்களோடு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஜனனி, ராசி மந்த்ரா, கிரேன் மனோகர், செந்திகுமாரி, சூப்பர் குட் சுப்பிரமணி, பாவல் நவகீதன் உள்ளிட்டோரும் நகைச்சுவை வேடத்தில் ஆதித்யா கதிர், தங்கதுரையும் நடித்துள்ளனர். நகைச்சுவையில் அசத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டிலும், ஆந்திர எல்லையான சித்தூரிலும் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்