நட்டி நட்ராஜ், அருண் பாண்டியன் இணைந்து நடித்துள்ள படம் ‘ரைட்.’
ஜில்லா, புலி படங்களில் அசோஷியேட் இயக்குநராக பணிபுரிந்துள்ள சுப்ரமணியன் ரமேஷ்குமார் இந்த படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பரபரப்பான சம்பவங்களைக் கோர்த்து, விறுவிறுப்பான திரைக்கதையில், அசத்தலான கமர்ஷியல் திரில்லராக படத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த படம் திரைப்படம் வரும் செப்டம்பர் 26-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் சென்னையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
நிகழ்வில் இயக்குநர் பாலசுப்பிரமணியம் ரமேஷ் பேசியபோது, ”என் இயக்குநர்கள் குழுவிற்கு முதல் நன்றி. என் அம்மா அப்பா, எனக்கு தொழில் கற்றுத்தந்த குருக்களுக்கு நன்றி. எப்போதும் ஊரில் என் நண்பர்கள் எப்போது படம் செய்வாய் எனக் கேட்பார்கள், அதற்கு தயங்கியே நான் எங்கும் போகாமல் இருந்தேன். என் நண்பர் ஜெயபாண்டி தான் திருமால் சாரை அறிமுகப்படுத்தினார், இப்படத்தை தயாரித்ததற்கு திருமால் சாருக்கு நன்றி.
நட்டி சார் ஆபீஸில் தான் நான் வாழ்ந்தேன். அவர் தான் நான் இப்படம் செய்யக் காரணம். இப்படம் ஒரே இடத்தில் நடக்கும் கதை நடிகர்களை ஸ்டேஜிங் செய்வது மிகுந்த சவாலாக இருந்தது.
குணா மிக அற்புதமான இசையை தந்துள்ளார். தாமு சார் கலை இயக்கத்தில் அசத்தியுள்ளார். மார்க்கஸ் சார் இப்படத்திற்கு முழு சப்போர்ட்டாக இருந்தார். அக்ஷரா மிக கடுமையாக உழைத்தார். நன்றாக நடித்துள்ளார். வினோதினி மேடமுக்கு சொல்லித்தர அவசியமே இல்லை. யுவினா நன்றாக நடித்துள்ளார். ஆதித்யா நிறைய சப்போர்ட் செய்தார்.
அருண் பாண்டியன் சாரிடம் அன்பிற்கினியாள் படத்தில் நான் வேலை செய்தேன். அவரைப்பார்க்கவே ஆறு மாதம் ஆனது. அவர் என்னை வேண்டாம் என சொல்லத்தான் கதை கேட்கவே ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் கதை பிடித்து நடிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கு நன்றி.
படம் சிறப்பாக வந்துள்ளது. எளிய மக்களுக்கு பிரச்சனை என்றால் காவல்நிலையத்தில் உதவி கேட்பார்கள். அந்த காவல் நிலையத்திற்கே ஒரு பிரச்சனை என்றால் என்னவாகும்? என்பது தான் இப்படத்தின் மையம். அனைவருக்கும் பிடிக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார்.
நட்டி (எ) நட்ராஜ் பேசியபோது, ”ரைட் ஒரு சுவாரஸ்யமான படம். ரமேஷ் என்னிடம் அஸிஸ்டெண்டாக இருந்தவர், அவர் கதை சொன்ன போதே யார் யாரெல்லாம் நடிக்க வேண்டும் என எழுதியே வைத்திருந்தார்.
அருண் பாண்டியன் சார் படத்தில் ஒரு கோ டைரக்டர் போல வேலை செய்தார். அவர் அர்ப்பணிப்பிற்கு நன்றி. அக்ஷரா ரெட்டி பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்தவர், மிக கடுமையாக உழைத்துள்ளார், வாழ்த்துக்கள்.
யுவினா சிறப்பான நடிப்பை தந்துள்ளார். ஆதித்யாவும் சிறப்பாக செய்துள்ளார். ரோஷனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. ரவிமரியா என் சிறந்த நண்பர் அவர் செய்த உதவிகள் ஏராளம் வந்து வாழ்த்தியதற்கு நன்றி.
படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களும் சிறப்பான உழைப்பைத் தந்துள்ளனர். குணா இசையில் வாழ்ந்துள்ளார். ஆர்ட் டைரக்டர் வேலை பெரியளவில் கண்டிப்பாக பேசப்படும். படத்தின் தயாரிப்பாளர்களுக்கு என் நன்றிகள். அனைவரும் இப்படத்தை தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும். சமூக அக்கறை மிக்க ஒரு விசயத்தை ரமேஷ் சொல்லியுள்ளார். அனைவரும் ஆதரவு தாருங்கள்” என்றார்.
நடிகை வினோதினி, நடிகர் ரவிமரியா, நடிகை அக்ஷரா ரெட்டி, வீரம் பட நடிகை யுவினா, நிர்வாகத் தயாரிப்பாளர் ப்ரான்சிஸ் மார்க்கஸ், நடிகர் ரோஷன், இசையமைப்பாளர் குணா பாலசுப்பிரமணியன், நடிகர் ஆதித்யா ஷிவக், எடிட்டர் நாகூரான், தயாரிப்பாளர் திருமால் லட்சுமணன் உள்ளிட்டோரும் நிகழ்வில் கலந்துகொண்டு படம் பற்றி பேசினார்கள்.


