Home பொது பிக்பாஸ் ராணவ் நடித்துள்ள ‘பிரேக்பாஸ்ட் Accept the Reality’ திரைப்பட டீசருக்கு ரசிகர்களின் அமோக வரவேற்பு!

பிக்பாஸ் ராணவ் நடித்துள்ள ‘பிரேக்பாஸ்ட் Accept the Reality’ திரைப்பட டீசருக்கு ரசிகர்களின் அமோக வரவேற்பு!

பிக்பாஸ் ராணவ் மற்றும் ரோஸ்மின் நடித்துள்ள ‘பிரேக்பாஸ்ட் Accept the Reality’ திரைப்பட டீசரை நடிகை ரீமா சென் வெளியிட, ரசிகர்களிடமிருந்து பெரியளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

கடும் கோடை வெயிலில் இதம் தரும் தென்றலை போல காதல், நெகிழ்ச்சி மற்றும் மனதை வருடும் உணர்வுகளோடு டீசர் வெளியாகியுள்ளது.

சினிமா ரசிகர்களிடையே இன்றும் தனி இடம் பிடித்துள்ள ‘செல்லமே’ மற்றும் ‘ஆனந்த தாண்டவம்’ போன்ற படங்களில் தனது தனித்துவமான கதை சொல்லலுக்காகப் புகழ்பெற்ற இயக்குநர் காந்தி கிருஷ்ணா இந்த படம் மூலம் கம்பேக் கொடுக்கிறார்.

அவர் ஆத்மார்த்தமான ரொமாண்டிக் அனுபவத்தை இந்தப் படத்தில் தரவிருக்கிறார் என்பது டீசரில் தெளிவாகியுள்ளது.

டீசரில் உரையாடல்களை விட காட்சிகளை முன்னிலைப்படுத்தி அதில் உணர்வுகள் முழுமையாக வெளிப்படும் விதமாக அமைந்துள்ளது. இதனை விமர்சகர்களும் ரசிகர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்