சிவகார்த்திகேயன் நடிப்பில், மடோனா அஷ்வின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படம் ‘மாவீரன்.’
இந்த படத்தின் படப்பிடிப்பு, எளிமையான பூஜையுடன் துவங்கியது.
இந்த படத்தில் நடிகை அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் மற்றுமொரு படமான ‘பிரின்ஸ்’ படத்தின் இணை தயாரிப்பாளரான அருண் விஸ்வா சாந்தி டாக்கீஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். திரைப்பட துவக்க விழாவில் இயக்குநர் ஷங்கர் கலந்து கொண்டார்.
தொழில்நுட்பக் குழு:
ஒளிப்பதிவு இயக்குனர் – விது அயன்னா
இசையமைப்பாளர் – பரத் சங்கர்
எடிட்டர் – பிலோமின் ராஜ்
கலை இயக்குனர் – குமார் கங்கப்பன்
ஸ்டண்ட் இயக்குனர் – யானிக் பென்
ஒலி வடிவமைப்பு – சுரேன் G, எஸ் அழகியகூத்தன்
ஒலிக்கலவை – சுரேன் G
ஆடை வடிவமைப்பாளர் – தினேஷ் மனோகரன்
ஒப்பனை கலைஞர் – சையத் மாலிக் S
உடைகள் – நாகு