‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு பிறகு ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை இயக்கியிருந்தார்
பா.இரஞ்சித்.
காளிதாஸ் ஜெயராம், கலையரசன் துஷாரா, ஹரி, ஷபீர், வினோத், மைம்கோபி உள்ளிட்டவர்களோடு புதுமுகங்கள் பலரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.
வித்தியாசமான கதைக்கருவில் உருவாகியிருந்த படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராகியிருக்கிறது. ஆகஸ்ட் 31-ம் தேதி தியேட்டரில் வெளியாகவிருக்கிறது.
யாழிபிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன், மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
தொழில்நுட்பக் குழு:- ஒளிப்பதிவு கிஷோர்குமார், இசை டென்மா, எடிட்டிங் செல்வா RK, கலை ரகு, நடனம் சாண்டி, சண்டைப்பயிற்சி ஸ்டன்னர் சாம்.