ஹரிஷ் கல்யாண், ‘அட்டகத்தி’ தினேஷ் இருவரும் இணைந்து நடிக்கும் ‘லப்பர் பந்து’ படத்தை ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார்.

‘கனா’, ‘நெஞ்சுக்கு நீதி’ உள்ளிட்ட படங்களின் கதாசிரியரும், ‘எஃப்ஐஆர்’ உள்ளிட்ட படங்களின் இணை இயக்குநருமான தமிழரசன் பச்சமுத்து இந்த படத்தை இயக்கவுள்ளார்.
இந்த படத்தில் சுவாசிகா விஜய் மற்றும் ‘வதந்தி’ புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். அவர்களுடன் காளி வெங்கட், தேவதர்ஷினி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் பூஜை சென்னையில் இன்று (மார்ச் 3; 2023) நடந்தது. படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கி நடைபெறவிருக்கிறது.
இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்க, தயாரிப்பு மேற்பார்வையை பால்பாண்டி கவனிக்க, நிர்வாகத் தயாரிப்பு பணியை மேற்கொள்கிறார் ஷ்ரவந்தி சாய்நாத்.
‘லவ் டுடே’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவை கவனிக்க, ‘ரன் பேபி ரன்’ படத்தில் பணியாற்றிய படத்தொகுப்பாளர் ஜி.மதன் எடிட்டிங்கை மேற்கொள்கிறார்.
