‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்தின் டைட்டில் போஸ்டர் என்ன சொல்கிறது?

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில், வரும் கோடை விடுமுறையின்போது வெளிவரவிருக்கும் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கதாபாத்திரங்களின் பெயர்களைக் கொண்டு ‘மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர். பொலிஷெட்டி’ தலைப்பிடப்பட்டுள்ளதை போஸ்டர் உறுதி செய்கிறது.நவீன் பொலிஷெட்டி – அனுஷ்கா நடிப்பில் காமெடி எண்டர்டெயினராக உருவாகியிருக்கும் இந்த படத்தின் போஸ்டரில், அனுஷ்கா ‘ஹேப்பி சிங்கிள்’ என்ற புத்தகத்தையும் இன்னொருபுறம், நவீன் ’ரெடி டூ மிங்கிள்’ என்ற ஹூடியுடனும் இருப்பது போஸ்டரை சுவாரஸ்யமாக்குகிறது.

போஸ்டரில் அழகாகவும் நவீன் பார்ப்பதற்கு ஸ்மார்ட்டாகவும் இருக்கிறார். இவர்களின் இந்த கெமிஸ்ட்ரிதான் படத்திற்கு முக்கிய உந்துதலாக இருக்கும்.மகேஷ் பாபு பி இந்தப் படத்தை இயக்க, யுவி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் புதுமையான, கிரியேட்டிவ் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் போஸ்டர் படத்தின் அடுத்தடுத்த புரோமோஷனுக்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளது.

படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவேகத்தில் நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here