Home சினிமா உண்மையான கொலைச் சம்பவத்தின் பின்னணியில் உருவான ‘விழி திற தேடு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

உண்மையான கொலைச் சம்பவத்தின் பின்னணியில் உருவான ‘விழி திற தேடு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழகத்தை உலுக்கிய உண்மையான கொலைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘விழி திற தேடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை இயக்கியுள்ள வி. என். ராஜா சுப்பிரமணியன் பேசும்போது, “இந்த படம் தமிழகத்தை உலுக்கிய ஒரு கொலைச் சம்பவத்தின் பின்னணியில் பல்வேறு கேள்விகளுடன், குற்றங்கள், காவல்துறை, சட்டம், வழக்கு போன்றவற்றைப் பற்றிய வேறொரு புரிதலுக்கு வழிவகுக்கும் படமாக உருவாகிறது.

நாட்டில் ஒவ்வொரு குற்றச் செயல் நடக்கும் போதும் மக்கள் அதை ஒரு புதிரோடுதான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் பல சம்பவங்களில் குற்றவாளிகள் பிடிபடுவதில்லை. அப்படிப் பிடிபட்டாலும் தப்பித்து விடுகிறார்கள். சில நேரம் தப்பிக்க விட்டு விடுகிறார்கள்.

இதில் எங்கே பிரச்சினை உள்ளது? காவல்துறை விசாரிக்கும் விதத்திலா? துப்பறியும் கோணத்தில் உள்ள கோளாறா? ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதில் மோசடிகளா?அல்லது சட்டத்தில் உள்ள ஓட்டைகளா? என்று மக்களிடம் பல்வேறு கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன.

எவ்வளவு கிடுக்கிப்பிடி சட்டங்கள் வந்தாலும் அதில் உள்ள இடைவெளி வழியே குற்றவாளிகள் தப்பித்துக் கொள்கிறார்கள். தொழில்நுட்பங்களைக் காவல்துறையில் பயன்படுத்தப்படும் விதத்தை விட குற்றவாளிகள் மிகவும் சாதுர்யமாக பயன்படுத்திக் குற்றங்களைச் செய்கிறார்கள்.

அதை மிகவும் நுணுக்கத்தோடு இந்த படம் பேசுகிறது. குற்றவாளிகள் தங்களை காப்பாற்றிக் கொள்ள எப்படி அரசியல் பின்புலத்தில் ஒளிந்து கொள்கிறார்கள்? அப்போது காவல்துறை என்ன செய்கிறது? இப்படியான பல விஷயங்களை படத்தில் பேசியிருக்கிறோம்” என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்